சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 1 April 2026

தேர்தல் திருவிழா 6

 ஒரு வளர்ந்து விட்ட நாகரீக சமுதாயத்தில் எதிர்மறை வாக்குகள் அதிகம் விழக்கூடாது .ஒரு நல்ல மக்கள் நல அரசு செயல் படும் போது எதிர்மறையாக பொதுவாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனாலும் நம் நாட்டை பொருத்தமிட்டினும் எதிர்மறை வாக்குகள் என்பது எப்பொழுதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது .

தத்துவார்த்த ரீதியாக வலதுசாரி கருத்து உடையவர்கள், இடதுசாரி கருத்து உள்ளவர்கள் மீது எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பதும், இடதுசாரி சிந்தனையாளர்கள் வலது சாலை கருத்து உடையவர்கள் மீது எதிர்மறை எண்ணம் கொண்டிருப்பதும் இயற்கை தான்.

 ஆனால் அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மற்ற மதத்தினர், அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு, ஜாதிக்கோ எதிராக மற்ற பிரிவினர் என, அவர்கள் எப்படியும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்த்து நிற்பவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் நிலை உள்ளது. இவையெல்லாம் எதிர்மறை வாக்குகளே. 

அதேபோல ஒரு கட்சி மீதான எதிர்ப்பு என்பது ஒரு சிலருடைய எண்ணத்தில் ஆழமாகவே பதிந்திருக்கும். எனவே அந்த கட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவே யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். இது ஒரு வகை எதிர் மறை வாக்கு தான். 

உதாரணமாக காங்கிரசை பிடிக்காதவர்கள் காங்கிரசுக்கு எதிரான எந்த கட்சி வந்தாலும் வாக்களிப்பார்கள். அதேபோல பொதுவுடைமைக் கட்சியை பிடிக்காதவர்கள், பொதுவுடமை கட்சிக்கு எதிராக எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தை பிடிக்காதவர்கள் என்று ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். அவர்கள் அதற்கு மாற்றாக ஒரு முறை அதிமுகவுக்கு வாக்களித்தார்கள் என்றால் மறுமுறை புதிதாக வரக்கூடிய இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பார்கள். ஆக மொத்தம் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பது என்பது அவர்களுடைய நிலைப்பாடு. இது ஒரு உதாரணம் தான்... இதுபோல ஏராளமான உதாரணங்களை நாம் காண முடியும்.

ஒரு நல்ல அரசின்  செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கும் போது அதை ஆதரித்து வாக்களிப்பது நேர்மறை வாக்குகள் என்றால், ஒரு அரசின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியின் காரணமாக அதை தொலைத்து தலை முழுக வேண்டும் என்று வாக்களிப்பது எதிர்மறை வாக்குகளே.. 

இதே போல இன்னொரு வகை வாக்களிப்பு முறை இருக்கிறது. அது மகா மேதாவிகள் அறிவுஜீவிகள் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ராமன் ஆண்டாலும்  ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை என்பது போல எல்லோரையுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பந்தமில்லாமல் யாருக்காவது வாக்களிப்பது அல்லது நோட்டாவிற்கு வாக்களிப்பது என இப்படி ஒரு கூட்டம் திரியும். இதேபோல இன்னொரு கூட்டம் எந்த தேர்தலிலும் வாக்களிக்காது குறை மட்டுமே கூறிக் கொண்டிருப்பார்கள் இவர்களையெல்லாம் எதிர்மறை சிந்தனையாளர்கள் அல்லது எதிர்மறை வாக்காளர்களாகவே கருதிக் கொள்ளலாம். 

இனி தேர்தல்களை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளை பற்றி பார்க்கலாம்..

 பொதுவாகவே கீழ் கண்ட( காரணிகள்) காரணிகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.

*கூட்டணி காரணிகள் — கூட்டணி காரணிகள்

*ஆளுமை எதிர்ப்பு காரணிகள்-anti incumbency காரணிகள்

*பரிவு சார்ந்த காரணிகள்-அனுதாப காரணிகள்

*மதம் சாதியம் சார்ந்த காரணிகள்-Religion- and Caste-based Factors.

*இதர காரணிகள் - Other factors. 


1 comment:

  1. மேற் சொன்ன காரணிகளை தாண்டி மக்கள் சிந்திக்க வேண்டும்….அதற்கு நிறைய படிக்க வேண்டும்…. ஆனால் நமது மக்கள் சோம்பேறிகள்.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...