மழை நின்றவுடன், குடை அனைவருக்கும் ஒரு சுமையாகிவிடுகிறது.
ஆற்றில் பயனம் செய்ய பயன்படும் தோனியை கரையேறிய பின் யாரும் தூக்கி சுமப்பதில்லை.
பயன் நின்றுவிடும்போது, இப்படித்தான் விசுவாசம் முடிவுக்கு வருகிறது.
அது தங்களுக்குப் பயன் தரும்போது மக்கள் பராமரிக்கிறார்கள். அந்த பயன் தராதபோது அவர்கள் மறந்து விடுகிறார்கள்.அதுவும் மறைந்து போகிறது.
ஆனால் மனிதர்கள் அப்படியல்லவே...
நம்மை நோக்கிடும் ஒவ்வொரு புன்னகையும் உண்மையானதல்ல.
நம்மை நோக்கி நீட்டப்படும் ஒவ்வொரு கையும் உதவும் நோக்கத்தில் இருப்பதில்லையே....
நமக்கு ஊக்கமளிப்பதாக பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நேர்மையிலிருந்து வருவதில்லை.
சில உறவுகள் நிபந்தனைக்குட்பட்டவை; அவை வசதி, சுகம் அல்லது ஆதாயத்திற்காக மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளன.
புயல் ஓய்ந்தவுடன், ஆதரவும் ஓய்ந்துவிடுகிறது.
இந்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத குருடர்களாக இருக்காதீர்கள்.
இருப்பினும்...
எந்த ஆதாயமும் இல்லாதபோதும் உடன் இருப்பவர்களை மதியுங்கள்.
பரிவர்த்தனைக்காக அல்லாமல், நிலையான இருப்பைக் கொண்டிருப்பவர்களைக் கவனியுங்கள்.
விசுவாசம் என்பது சுகமான காலங்களில் அளவிடப்படுவதில்லை.
அந்த கஷ்டத்திலும், போராட்டத்திலும், யாருக்கும் எதுவும் தரப்படக் கூடாத தருணங்களிலும் சோதிக்கப்படுகிறது.
உடன் இருக்கும் அரிதான ஆன்மாக்களைப் போற்றுங்கள்.
மழைக்காக மட்டுமே வருபவர்களை விட்டுவிடுங்கள்..
தங்களின் தேவைக்காக மட்டுமே வருபவர்களை விட்டுவிடுங்கள்..
சிறிதோ, பெரிதோ, தக்க சமயத்தில் நமக்கு உதவி செய்தவர்களை எந்நாளும் மறந்து விடாதீர்கள்..
"காலத்தி நாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
நன்றி மறவாதீர்…..கடமையை செய் பலனை எதிர் பாராதே.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇந்த சொல் சில மனிதர்களை விட பறவை மற்றும் விலங்குகளுக்கு பொருந்தும்.,,
ReplyDelete