சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 4 March 2026

டிரம்ப் எனும் குரங்குபுத்திக்காரன்.

 வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தில் ஷைலக் என்ற பிரபலமான எதிர்மறை கதாபாத்திரம் உண்டு. 

வட்டிக்கு பணம் கொடுப்பவர், பேராசை மற்றும் பழிவாங்கும் குணம் கொண்டவராக ஷைலக்,  ஆண்டோனியோ என்ற வர்த்தகருக்கு கடன் கொடுத்து, அதைத் திருப்பிச் செலுத்த தவறினால் அவர் உடலில் இருந்து ஒரு பவுண்டு சதையை எடுத்துக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அந்தோனியோ அந்த பணத்தை கட்ட முடியாத போது ஒரு பவுன் சதை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்.

 இப்படி ஒரு கதையை பள்ளியில் படித்த காலத்தில் அநேகமாக எல்லோரும் படித்திருப்போம்.இது ஒரு கதை.... 


 இப்படி கூட இருக்க முடியுமா என்று எண்ணம் எல்லோருக்கும் வரும் ஆனால் உலகமெங்கும் யூதர்களில் பெரும்பாலானோர் லேவா தேவி தொழிலில் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதித்தனர். 

அதன் விளைவாக பலருடைய வெறுப்பை சம்பாதித்ததால் பலராலும் துரத்தப்பட்டார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை கொடுமைப்படுத்தியதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். 

அவ்வாறு துரத்தப்பட்டவர்கள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கா பிரிட்டன் ஆதரவோடு பாலஸ்தீனத்திற்குள் நுழைந்து  என்றோ தொலைந்து போன இஸ்ரேல் என்ற நாட்டை மீண்டும் உருவாக்கி, இடம் கொடுத்த பாலஸ்தீனத்திலே, இடம் கொடுத்த பாலஸ்தீனர்களை துரத்தி நாசம் செய்தனர். 

இது ஒரு வரலாறு. 

இன்னொரு புறம் உலகமெங்கும் உலக வங்கியில் இருந்து பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுடைய பிடியில் தான் இருக்கின்றது. இன்னும் சொல்ல போனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை அவர்களிடம் தான் உண்டு. அவர்கள் கைகாட்டுபவர்கள் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடியும். அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதிகளெல்லாம் ஜனநாயக கட்சி குடியரசு கட்சி என்ற பேதம் இல்லாமல் இருவருமே யூதர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் ஆதரவாக தான் ஆட்சி செய்து வருகின்றனர், வருகின்றனர். 

இது யதார்த்தம்... 

இஸ்ரேல் என்ற நாட்டிற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆனாலும் கூட இதுவரை வந்த ஆட்சியாளர்கள் கொஞ்சமாவது சொந்த புத்தி உள்ளவர்களாக இருந்தார்கள். ராணுவ தளபதிகள், ராஜதந்திரிகளென மற்றவரிடம் கலந்து கொண்டு செயல்பட்டனர். ஆனால் டிரம்ப் என்ற புண்ணியவானோ சொல்லவே வேண்டாம். 

முன்பு ஒரு பிரபலமான குரங்கு கதை உண்டு ஒரு ஊரில் ஒரு குரங்கு இருந்தது. அதற்கு கர்வம் ஜாஸ்தி. பொதுவாகவே குரங்குகளுக்கு சேட்டை குணம் உண்டு. இதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல்.

அந்த ஊருக்குள் வரும் வழியில் ஒரு மதுபாட்டில் ஒன்று கிடந்தது. அது அந்த மது பாட்டிலை திறந்து குடித்து விட்டது. குடித்த உடன் அதற்கு போதை ஏற்றி விட்டது. ஏற்கனவே சேட்டைக்கார குரங்கு, மது போதை சேர்ந்தால் எப்படி இருக்கும்.

போதையுடன் வந்த குரங்கு பக்க கடையில் இருந்து மிளகாய் பஜ்ஜி எடுத்து கடித்து விட்டது. சரியான காரம் . ஒரு சேட்டைக்கார குரங்கு, மது போதை, காரமான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

அன்றைக்கு பார்த்து வெயில் ரொம்ப அதிகம். போதை, மிளகாய் பஜ்ஜி, உஷ்ணம் எல்லாம் சேர்ந்ததால் நிலை தடுமாறி கிடைத்த பொருளை எல்லாம் நாசம் செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆட்களை வேறு கடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு பொந்தை பார்த்தவுடன் சும்மா இருக்க மாட்டாமல் உள்ளே கையை தினித்து ஏதாவது கிடைக்குமா என்று துளாவியது. உள்ளே இருந்த தேள் அதை கொட்டி விட்டது.

அதுவே குரங்கு புத்தி, மது போதை, மிளகாய் காரம், உஷ்ணம், போதாததற்கு தேள் கொட்டியதால் கடுப்பேறி கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதற ஆரம்பித்தது.

இப்படி ஒரு கேவலமான சொல்புத்தி இல்லாத கிறுக்குத்தனமான ஒரு குரங்கைதான் இஸ்ரேலிய யூத ஆட்சியாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள் இதுவரை இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் சொந்த புத்தி இல்லாத அடிமுட்டாள் டிரம்ப் என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலமாக கண்டு கொண்டனர். 

ஒரு பெண் பித்தனாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தோன்றித்தனமாக செயல்படக்கூடிய டிரம்ப்பை பயன்படுத்தி இஸ்ரேலிய நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் சிக்கி நிற்கும்  நெதன்யாகு  மைனாரிட்டி அரசு காய் நகர்த்தி ஈரான் போரில் சிக்க வைத்துள்ளது. 

ஏற்கனவே பல நாடுகளை அச்சுறுத்திய இயக்கம் டிரம்ப் வெனிசுலா குடியரசு தலைவரை வீடு புகுந்து கைது செய்த போது எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். அவர் ஒரு சோசியலிஸ்ட் என்பதால் பலரும் உச்சி குளிர்ந்தனர். 

அடுத்து ட்ரம்ப் கிரீன்லாண்டை கைப்பற்றுவோம் என்றது. கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்த்து விடுவோம் என்றது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நேட்டோ நாடுகள். ஈரானை காரணம் காட்டி இஸ்ரேலுக்கு உதவுவதற்காக வளைகுடா நாடுகள் அனைத்திலும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விட்டார். தன் மீது உள்ள எப்ஸ்டீன் பைல்கள் வழக்கு விசாரணைகள் இருந்து தப்பிப்பதற்காக திசை திருப்பும் வேலையாக ஈரான் மீது படை எடுத்துள்ளார். அவருக்கு தன்னுடைய நாடு, அதன் அரசியல் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றம், செனட் சபைகள், நேட்டோ நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, எதைப் பற்றியும் கவலையும் இல்லை கட்டுப்படவும் விரும்பவில்லை. 

"உலகில் உள்ள எந்த நாட்டு விமான நிலையத்தையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் எங்களை யாரும் தடுக்க முடியாது" என்று இன்று ட்ரம்ப் சொல்லுகிறார்.

எந்த நாடாக இருந்தாலும், நாங்கள்  விரும்புகிற ஆட்சியாளர் மட்டுமே ஆளலாம், இல்லையென்றால் அவர்களை கொன்று விட்டு நாங்கள் விரும்பும் ஆளை ஆட்சியாளராக ஆக்குவோம் என்று மிரட்டுகிறார். 

இவரது குரங்குத்தனமான சேட்டைகளினால் பாதிக்கப்பட போவது வெனிசுலா ஈரான் போன்ற எங்கோ இருக்கக்கூடிய நாடுகள் மட்டும் அல்ல. பெரிய  நாடுகளிலிருந்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம்  இருக்கக்கூடிய சிறிய நாடுகள் வரை ஒட்டுமொத்த உலகையுமே ஆபத்திற்கு உள்ளாக்கி இருக்கும் இந்த குரங்கின் சேட்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

இல்லை என்றால் ஐக்கிய நாடுகள் சபை அதன் உறுப்பு நாடுகளுடைய இறையாண்மை எல்லாமே கேள்விக்குரியதாக மாறிவிடும். 

நக்குகிற நாய்க்கு செக்கும் தெரியாது., சிவலிங்கமும் தெரியாது. 

அதற்கு ஆமாம் சாமி போடக்கூடிய நம்மையும் நாளை கடித்து விடும்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...