ஆதி காலத்திலேயே தமிழர்கள் இயற்கையையும், அது சார்ந்த விடயங்களையும், ஆராய்ந்து அவற்றை மதித்து வணங்கி வந்தனர் என்பதற்கு ஏராளமாய் இலக்கியச் சான்றுகள் உள்ளன.
பூமியைச் சுற்றி சூரியனும், இதர கோள்களும் சுற்றி வருவதாக பின்னாளில் சோதிட புளுகர்கள் நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு முன்னரே, சூரியனும் அது சார்ந்த விசும்பு ஆகாயம் ஆகிய மண்டலங்கள் பற்றி அறிவு பெற்று இருந்தோம் என்பதை புறநானூற்றுப் பாடல் 30 விளக்குகிறது.
சூரியனின் பயணம், அது இயங்கும் மண்டலம், காற்றின் திசை, வெற்றிடமான ஆகாயம் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து, நேரில் சென்று அளந்தது போலத் துல்லியமாகச் சொல்லக்கூடிய அறிஞர்கள் உள்ளனர்., அது போலசோழன் நலங்கிள்ளியின் புகழைப் பாடும்போது, ஒரு மன்னன் சூரியனைப் போல ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக , புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் வானியல் காட்சிகளைப் பாடியுள்ளார்.
"செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி"
அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே ஆகாயம் பற்றிய அறிவு பெற்று இருந்த தமிழர் இன்று அத்தனை விஞ்ஞான கருவிகளும் வந்து கண்ணுக்கு முன்னரே காட்சிகள் காட்டிய பின்னரும் சூரியன், கோள்கள் பற்றிய புளுகுகளை நம்புகிறாரே என்னவென்று சொல்ல?!!!
No comments:
Post a Comment