நான் சென்ற கட்டுரையில் மருந்தாளுநர் பினச்சோதனையில் படும் அவதிகளை பற்றி எழுதியிருந்தேன். அதை மென்மையாக கடந்து செல்லலாம் என்ற சில விவரங்கள் மட்டுமே எழுதியிருந்தேன். சில நண்பர்கள் அதுபற்றி கேட்டதால் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்.
எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது பிறப்பு இறப்பு இரண்டும் தான். மனிதனைப் பொருத்தமட்டில் பிறப்பு என்றால் மகிழ்வது, கொண்டாடுவது, இறப்பு என்றால் அது இழப்பு என்பதால் துக்கம் அனுசரிப்பது இயல்பான ஒன்று. எந்த இறப்பாக இருந்தாலுமே கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.
மருத்துவமனையில் பினச் சோதனைகள் சந்தேக மரணத்தின் போது செய்யப்படுகிறது, கொலையாகவோ, தற்கொலையாகவோ, விபத்தாகவோ அல்லது என்னவென்று தெரியாதோ போது சந்தேகத்தை தெளிவுபடுத்துகிற வகையிலே பினச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. இப்பணியில் மருந்தாளுனர்களுடைய பங்கேற்பு என்பது உளவியல் ரீதியாக எப்பொழுதுமே மனச்சோர்வையும் துக்கத்தையும் தரக்கூடியது.
எனது ஆருயிர் நண்பர் பாஸ்கரன் அடிக்கடி சொல்வார்.
நான் கோயிலுக்கு சென்று வழிபடும் போதும் கூட பத்தி வாசனையை நுகரும்போது என்னை அறியாமல் பிணைச் சோதனை தான் நினைவுக்கு வருகிறது என்பார்.
காரணம் பினச் சோதனையின் போது துர்நாற்றம் தாங்க முடியாமல் இருக்கும்போது, பத்தியை கட்டு கட்டாக கொளுத்தி விடுவார்கள். அவ்வாறு மனதிற்குள் ஆழமாக அந்த வாசனை கூட பாதிப்பை உண்டாக்கி விடுகின்றன.
இதை மறப்பதற்காக பினச் சோதனையில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் மது அருந்தி விடுவார்கள். அதுவே பழக்கமாகி போதைக்கு அடிமையான பிறகு பிணசோதனை வரவில்லை என்று ஏங்குவார்கள்.
நான் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் போது அங்கிருந்த தூய்மை பணியாளர், முழு போதைக்கு அடிமையானவர், அங்குள்ள பிள்ளையார் கோவிலில் நின்று கொண்டிருந்தேன் கொண்டிருந்தேன் வேண்டுவார். எல்லாருக்கும் நிறைய கேஸ் வருது நிறைய காசு வருது எனக்கு மட்டும் ஏன் பிணத்தை கொடுக்க மாட்டேங்குற நாலு சாவு இருந்தா தானே நான் நாலு காசு பாருங்க முடியும் என்று புலம்புவார். அந்த அளவுக்கு மனித மனம் மரத்துப் போவதைக் கண்டால் வருத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு பிரேத பரிசோதனைக்குப் பின்னும், அதன் பின்னால் ஒரு கதை என நூறு நூறு, ஆயிரம் ஆயிரம் மர்மங்கள் புதைந்திருக்கும். விபத்து என்றால் துயரமென, தற்கொலை என்றால் சோகமென, கொலை என்றால் பயங்கரமென, சொல்ல முடியாத ஏராளமான உணர்ச்சி கலவைகள் இருந்தாலும் பினச்சோதனைக்கு செல்லும் மருந்தாளுனர் ர் மனது ஒரு இனம் தெரியாத அருவருப்போடு மரத்துப்போய் நிற்க வேண்டி இருக்கும்.
சில நேரங்களில் உடனே வந்த பிரஷான சடலங்கள், சில நேரங்களில் நாற்றம் எடுக்கும் சடலங்கள், சில நேரங்களில் துண்டு துண்டாக கோரமான சடலங்கள் என அருவருப்பின் உச்சகட்டத்தில் போய் நிற்க வேண்டும்.
களத்தில் கிடைக்கும் சடலங்களை பிரேதப்பரிசோதனை செய்ய ரயில்வே டிராக்கிற்கோ, காட்டிற்கோ ஆளரவமற்ற இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
மருந்தாளுனர் வீட்டில் சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளோ அல்லது ஏதாவது விசேஷங்களோ நடத்த வேண்டிய காலமாக இருக்கும். கடமை என்று வரும்போது அவற்றை ஓரம் கட்டி விட்டு மனதை கல்லாக்கி வட்டு , செல்ல வேண்டி இருக்கும். பெண் மருந்தாளுநர்கள் என்றால் இன்று கொடுமையாக இருக்கும் சொல்ல முடியாத விஷயங்கள்.
இவ்வாறு உளவியல் ரீதியாக வருத்தத்தையும், எரிச்சலையும், அருவருப்பையும் தரக்கூடிய பினச் சோதனைகளுக்கு சென்று வந்தால் அதற்கு ஒரு சொற்பத்தொகை அரசால் வழங்கப்படும்.
யாரும் விரும்பி இவ்வேலைக்கு செல்வதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் மகிழ்ச்சி இருக்கும். அது வேறொன்றும் இல்லை. எப்பொழுதுமே போலீஸ்காரருக்கு நாம்தான் போய் சலாம் வைப்போம். இந்த வேலையில் அவர்களுடைய தேவைக்காக போலீஸ்காரர் நமக்கு வந்து சலாம் வைப்பார். கொஞ்சம் மரியாதையாக தெரியும். அவ்வளவுதான்...
மற்றபடி மருத்துவத்துறையில் மருத்துவர், துப்புரவு பணியாளர், தவிர வேறு எந்த பணியாளரும்(செவிலியர், தொழில் நுட்ப பணியாளர்) இந்த வேலைக்கு செல்வதில்லை. மருந்தாளுநர் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் அரசு ஊதிய சலுகைகள் அளிக்கப்படும் ஊதியக்குழு போன்ற இடங்களில் மருந்தாளுனர்களின் பல்வேறு பணிகளுக்கு இடையில் இப்படி ஒரு பணியும் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூட பரிவோ. பச்சாதாபம், அனுதாபமோ காட்டுவதில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
No comments:
Post a Comment