சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 19 March 2026

தேர்தல் திருவிழா 3

தேர்தல் என்று வந்தவுடன் நாம் காணும் இந்த தேர்தல் முறை வருவதற்கு முன்னால், இந்த உலகம் சந்தித்த தேர்தல்கள் எத்தனை மாற்றங்களை எல்லாம் கண்டிருக்கிறது என்பதை சற்று திரும்பி தான் பார்ப்போமே!

 கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு குடியரசு அமைப்பை கொண்டிருந்த ரோமானியர்கள் நடத்திய தேர்தல் முறையை பார்க்கலாமே. 

 (சுமார் கிமு 509–27) குடியரசு அமைப்பின் கீழ், பண்டைய ரோமானிய தேர்தல் முறை  குடிமக்கள் நேரடியாக வாக்களிக்கும் ஒரு அமைப்பாக இருந்தது. இது பெரும்பாலும் பிரபுத்துவ சார்புடையது. ஓட்டுப் பதிவு பொது இடங்களான ஃபோரம் எனப்படும் மன்றம் அல்லது கேபிடோலின் குன்றில் நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் குழுக்களாகப் பிரிந்து வாக்களித்தனர்; குதிரைப்படை மற்றும் பெரும் பணக்காரக் குழுக்களுக்கு வாக்குப்பதிவில் முன்னுரிமை மற்றும் அதிக அதிகாரம் இருந்தது. 

வாக்காளர் குழுக்கள் (பழங்குடியினர்) பிரிக்கப்பட்டனர், ஒவ்வொரு குழுவும் ஒரு வாக்காகக் கணக்கிடப்பட்டது. 

தேர்தல்கள் மத நம்பிக்கைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. தீய சகுனங்கள் எனக் கருதப்படும் நாட்களில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஆக அங்கும் மதம் தான் அரசியலில் குறிக்கிட்டிருக்கிறது என்று தெரிகிறது

தூதர்கள் (கான்சல்கள்), பிரிட்டர்கள் (Praetors), மற்றும் கன்சர்வேட்டர்கள் (Censors) போன்ற உயர்பதவிகளுக்கு Comitia Centuriata செல்வந்தர் ஆதிக்கம் பெற்ற நூற்றாண்டினர் மூலமும், பிற அதிகாரிகளுக்கு Comitia Tributa பழங்குடி/பிராந்திய அடிப்படையிலானவர் மூலமும் தேர்தல் நடைபெற்றது.

வாக்குகள் ஆரம்பத்தில் குரல் மூலமும், பின்னர் வாய்மொழியாகவும், இறுதியில் ரகசிய வாக்குச்சீட்டுகள் மூலமும் பதியப்பட்டன.

ஏழைக் குடிமக்களின் வாக்குகளை விட, செல்வந்தரின் வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. எல்லா காலத்திலும் பணம் படைத்தவனுடைய செல்வாக்கே அதிகாரம் மிக்கதாய் இருந்திருக்கின்றது. 

வேட்பாளர்கள் பெரும்பாலும் தங்களின் தனிப்பட்ட நற்பண்புகள், தனிப்பட்ட அல்லது குடும்பப் புகழ், அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பரிசுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். தேர்தல்களின் கணிக்க முடியாத தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், பணம், உணவு மற்றும் விளையாட்டுகள் வடிவில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் லஞ்சங்கள் ஒரு பொதுவான மற்றும் சுமையான பிரச்சாரச் செலவாக இருந்தன. எல்லா காலத்திலேயும் தேர்தல் என்று வரும்போது முறைகேடுகளும் பணப்புழக்கங்களும் இருந்திருக்கின்றன என்பது வரலாறு. 

காலப்போக்கில் குடியரசு முறை சீரழிந்து சர்வாதிகாரம் பெற்ற பேரரசனின் கீழ் ஆட்சி அதிகாரம் சென்றபின் தேர்தல் முறை ஒழிந்து போனது. 

இதிலிருந்து மனித உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், தேர்தல் முறைகேடுகள், பண புழக்கங்கள் போன்றவை தேர்தல் முறை மீதான நம்பிக்கையை குலைத்து விடும். அதைவிட மோசமானது, குறைந்தபட்ச மக்கள் பங்கேற்பு இருக்கக்கூடிய தேர்தல் முறை ஒழிந்து, தனிநபர் சர்வாதிகாரம் என்று அமைந்துவிட்டால் அது அதைவிட மோசமான விளைவுகளையே உண்டாக்கும். இதுதான் வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடம்.


தொடர்ந்து யோசிப்போமே... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...