சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 17 March 2026

நெஞ்சுக்கு நீதி

 தாம் செய்யும் செயல்கள் யாவும் பிறருக்கு தெரியாது என்பதால், அல்லது நினைத்துக் கொள்வதால் தம்மை யாரும் செய்து விட முடியாது என்று அநீதியாக செயல்படும் மனிதர்களைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகு சங்க கால இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் நீதி கூறி இருக்கிறது என்பதை எண்ணி பார்ப்போமாக

" கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,

தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,

நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்

நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை"

கலித்தொகை நெய்தல் கலி பாடல் 125-ல் வரும் இந்த வரிகள், பிறர் பார்க்கவில்லை என்று எண்ணி, தன் மனதிற்குத் தெரிந்த கொடிய செயல்களை மறைத்துச் செய்தாலும், அதை அறிபவர் நெஞ்சமே சாட்சியாக இருப்பதால் அவை மறைந்தது, உண்மையான சாட்சி நம் நெஞ்சமே என்பதை விளக்குகிறது.

கலித்தொகை – நெய்தல் கலி

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்

கி.மு. காலத்துப் பாடல்

இதையே வள்ளுவப்பெருந்தகை பின்வரும் குறளிலே எடுத்தியம்புகிறார்

"தன்னெஞ் சரிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்."

பிறர் அறியவில்லை என்று நினைத்து, தன் மனதிற்குத் தெரிந்த ஒன்றைப் பற்றிக் பொய் சொல்லக்கூடாது; அவ்வாறு சொன்னால், அந்தப் பொய், தன் மனசாட்சியின் மூலமாகவே தன்னைச் சுட்டுத் துன்புறுத்தும்.

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது

நீதிதேவனின் அரசாட்சி"

என நம் காலத்து திரைப்பட பாடலாசிரியர் இதையே எளிமையாக கூறுகிறார்.,

நம் காலத்திலோ உலகமே பார்த்துக் கொண்டிருக்கையில் பலர் சாவுக்கு தான் காரணமாக இருந்தும், பொது வாழ்க்கையில் ஒழுக்கக் குறைவாகவும் நேர்மை குறைவாகவும் இருந்து கொண்டு பதவியில் இருந்து கொண்டும் பதவியில் இல்லாமல் இருந்தும் குறுக்கு வழியில் பொருளீட்டிக்கொண்டு, வெட்கமே இல்லாமல் உலகை வலம் வரும் பிறவிகளை எவ்வாறு மனிதர்கள் என்று கூறுவது?!


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...