அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" (குறள் 80) என்பது அன்பின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள்.
அன்போடு செயல்படும் உடலே உயிர் உள்ளது; அன்பு இல்லாதவரின் உடல் வெறும் எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட சடலத்திற்குச் சமம் என்பது இதன் பொருள்.
"எங்கு அன்பு ஆள்கிறதோ, அங்கு அதிகார வேட்கைக்கு இடமில்லை; எங்கு அதிகாரம் மேலோங்கி நிற்கிறதோ, அங்கு அன்பு இருப்பதில்லை. ஒன்று மற்றொன்றின் நிழலாகத் திகழ்கிறது." - கார்ல் ஜங்
அன்பும் அதிகாரமும் நமக்கு, அவற்றின் தூய வடிவங்களில், அரிதாகவே ஒரு நிலவு ஜங் நினைவூட்டுகிறது. அன்பு வழிகாட்டும்போது, ஆதிக்கம் மறைந்துவிடுகிறது. அதிகாரம் மேலோங்கும்போது, பிணைப்பு வலுவிழந்துவிடுகிறது. ஒன்று மறைத்து வைத்திருப்பதை மற்றொன்று வெளிப்படுத்துகிறது; இதன் மூலம், நமது மனிதநேயத்தை வலுப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அவை நம்மைத் தூண்டுகின்றன.
அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது.
அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.-கதே
உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.-வால்டேர்
இவ்வாறு அன்பை போதிக்காத மதங்களும் இல்லை மார்க்கங்களும் இல்லை அரசியல் அமைப்புகளும் இல்லை. ஏராளமான அறிஞர்களும் அன்பைத்தான் போதித்திருக்கிறார்கள். எல்லா மத இலக்கியங்களும் இறை தூதர்களும் போதிப்பது அன்பைத்தான். அது 2000, 3000 ஆண்டுகளுக்கு மேலாக அன்பை போதிப்பதாகத்தான் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனால் நடைமுறையில் எல்லாம் இருக்கிறது அன்பை தவிர......
இப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு போப் ஆண்டவர் போருக்கு எதிராக மனம் நொந்து போய் சபித்ததை நான் பார்க்கிறேன். நீங்கள் யாராவது பார்த்திருந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் , சங்கீதம் 144-ஐ மேற்கோள் காட்டி, "போருக்காக என் கைகளைப் பயிற்றுவிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும்" என்று கூறி, ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் கடவுளால் பாதுகாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். அவர் இந்த இராணுவ நடவடிக்கையை தெய்வீக அங்கீகாரம் பெற்றது என்று சித்தரித்து, கடவுளின் அருள் படைகளுடன் இருக்கிறது என்று குறிப்பிட்டார். இருப்பினும், போப் லியோ XIV கடுமையாகப் பதிலளித்து, போரில் கடவுளின் பெயரைப் பயன்படுத்தும் யோசனையை விமர்சித்தார். அவர் ஹெக்ஸெத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், "சிலர் இந்த மரணத் தேர்வுகளில் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்," என்று கூறிய போப், "ஆனால் கடவுளை இருளால் பயன்படுத்திக்கொள்ள முடியாது," என்றும் மேலும் கூறினார். வன்முறை ஒருபோதும் நீதிக்கு வழிவகுக்காது என்பதை வலியுறுத்தி, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
குருத்தோலை ஞாயிறன்று வத்திக்கானில் ஆற்றிய உரையின்போது, போர்களைத் தொடங்கும் தலைவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிராகரிப்பதாக போப் தெரிவித்தார்.
அன்பே சிவம்….
ReplyDelete