சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 20 March 2026

தேர்தல் திருவிழா4

 சரி மற்ற நாடுகளில் நடந்த தேர்தல்களைப்பற்றி நாம ரொம்ப யோசிச்சு கஷ்டப்பட வேண்டாம். நம்ம ஊர்ல தேர்தலில் எப்படி வந்தது என்று பார்ப்போம். 

நமது இந்திய துணை கண்டம் எல்லாம் காலத்திலுமே ஒரே நாடாக இருந்தது இல்லை.

அசோகன்,. சந்திரகுப்த மௌரியன் தொடங்கி பின்னாளில் முகலாய பேரரசு என சில பல காலம் பரந்த பேரரசாக இருந்திருந்தாலும் பல தேசங்கள் தான் இருந்திருக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டிக் கொடுத்ததனால, நிர்வாக சீர்கேட்டாலே, அல்லது அந்நிய படையெடுப்பாளரால் என இருந்த தேசங்கள் மறைகிறது புதிய தேசங்கள் உருவாவதுமா தான் காலம் ஓடிட்டு இருந்துச்சு. இங்கிருந்த சூழ்நிலையை வசதியா பயன்படுத்தி வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி கிட்டத்தட்ட மொத்த நாட்டையும் கபளீகரம் பண்ணிடுச்சு. ஏற்கனவே பதவி சுகத்தை அனுபவிச்சவங்க, அதிகாரத்தை பார்த்தவர்கள், அதிகாரத்தை பறிகொடுத்தவங்க, அல்லது இருக்கிற அதிகாரத்தை காப்பாற்ற நினைக்கிறவங்க எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய போரை நடத்தினார்கள். அது  போறதெல்லாம் கிடையாது சிப்பாய் கலகம் என்று சிம்பிளா வெள்ளைக்காரன் பெயரை வைத்து முறியடித்தனர்,   விளைவு நேரடியா பிரிட்டிஷ் மகாராணி அவரது ஆட்சிக்கு கீழ இந்தியா வந்தது. 

இது சுருக்கமான கதை. இதில் நிறைய விமர்சனங்கள் இருக்கலாம்.  அதற்கு நான் பொறுப்பு இல்லை. நான் சொல்ல வந்தது நிர்வாக அமைப்பு பத்தி தான். அப்படி பிரிட்டிஷ் மகாராணி ஆட்சிக்கு கீழ் இந்த நாட்டினுடைய சட்ட திட்டங்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மகாராணியின் ஒப்புதல் பெறப்பட்டது. 

அரசியல் விழிப்புணர்வு வருவதற்கு மேல் எழுபது என்பது ஆண்டுகள் கழிந்து விட்டது. 1920 களுக்கு பின்பு தான் ஓரளவுக்கு மட்டுமே அதிகாரம் கொண்ட மைய மாகாண அரசுகள் உருவாக்கப்பட்டன மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் அரசு நேரடியாக உறுப்பினர்களை நியமனம் செய்தது வாக்களிப்பதற்கான தகுதி என்பது சுருக்கப்பட்டு பட்டம் பெற்றவர் நிலச் வாழ்ந்தார்கள் வரி கட்டுவோர் என குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தேர்தல்கள் மட்டுமே நடைபெற்றது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தான் வாக்களிக்க கூடிய வயது வந்த அனைவருமே வாக்களித்து நமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து மைய மாநில அரசுகளை உருவாக்கும் உரிமைகளை பெற்றோம் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் யாரென தேர்ந்தடுக்கும் உரிமை சும்மா எளிதில் வந்து விடவில்லை. 

ஆயுதபடைபலம் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்களுடைய வாரிசுகள் என நம்மை ஆண்டவர்கள் தான் வரலாற்றில் மிக அதிக காலம். நம்மை ஆளும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் இந்த நூறாண்டுகளுக்குள் மட்டும் தான் நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் நாமோ ஜாதி பார்த்து மதம் பார்த்து அழகாய் இருக்கிறார்களே என்று நடிகர்களை பார்த்து நன்கு பேசுகிறார்களே என்று பார்த்து பொருத்தமே இல்லாத தகுதியே இல்லாத பலரைத் தேர்ந்தெடுத்து விட்டு திண்டாடி தெருவில் நிற்கிறோம் தேர்தல்களில் நிறைய பணம் செலவழிப்பவர்கள் பணம் கொடுப்பவர்கள் விளம்பரங்களை கொண்டவர்களைத்தான தேர்ந்தெடுக்கிறோம் நம் வாழ்க்கைக்கான கொள்கைகளை பேசுகிறவர்கள் நமக்காக வாழ்நாள் முழுக்க போராடுகிறவர்கள் நேர்மையானவர்கள் எளிமையானவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று பார்த்து தேர்ந்தெடுக்கலாமா என்பதை அறிவார்ந்த உலகம் சிந்திக்க வேண்டும் மற்றவர்களுக்கு எடுத்து இயம்ப வேண்டும் வெறுமனே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய திருவிழாவாக பார்த்து வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக இல்லாமல் பங்கேற்பவர்களாக மாற வேண்டும் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற சிந்தையோடு செயல்படாமல், அல்லது எவனுமே சரி இல்லை என்று நோட்டாவிற்கு போடாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் அது தான் ஒவ்வொரு வாக்காளன் உடைய கடமையாகும். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...