சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 5 April 2026

குந்தித் தின்றால் குன்றும் கரையும்

வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை இலக்கியங்களும் சான்றோர் மொழிகளும் எல்லா காலங்களிலும் விளக்கிக்கொண்டேயிருக்கிறது. 

" ஆன முதலில் அதிகம் செலவானால்மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசைஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்நல்லார்க்கும் பொல்லனாம் நாடு."

இது ஔவையார் கூறும் நல்வழி. 

 சம்பாதித்த பணத்தை விட அதிகமாகச் செலவு செய்தால் மானம் (கௌரவம்) அழியும்.அறிவு மயக்கம்: என்று பகுத்தறிவு கெட்டு, புத்தி தடுமாறும்.திருட்டுப் பட்டம்: கடன் கொடுத்தவர்களிடம் திருடனைப் போல நடந்து, சமூகத்தில் அவமதிப்பு ஏற்படும்.தீய விளைவு: பிறப்புகளும் தீய செயல்களைச் செய்தவர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். வெறுக்கப்படுவான்.

வரவுக்குள் செலவு செய்யாவிட்டால் கௌரவம், அறிவு, நட்பு அனைத்தும் அழிந்து போகும்.

குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்றொரு பழமொழி உண்டு.

ஒருவனுக்கு குன்று அளவுக்கு சொத்து இருந்தாலும், உழைத்து வருமானம் தேடாமல் உட்கார்ந்து கொண்டு தின்று செலவுசெய்து வந்தால், செல்வம் கரைந்து வீதிக்கு வர நேரிடும். இதை கிண்டலாய் 9எனது தந்தையார் சுகஜீவனம் என்று கூறுவார். 

இக்கருத்தையே மேநாட்டு அறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் இவ்வாறு கூறுகிறார். 

சிறு செலவுகளில் கவனமாக இருங்கள்; ஒரு சிறு கசிவு ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்துவிடும்."— பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

திட்டமிட்டு வரவு செலவுகள் பார்த்து வாழ வில்லை என்றால் திண்டாடி தெருவில் நிற்க வேண்டியது தனி மனிதன் மட்டுமல்ல நாடும் தானே? !! 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...