சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 21 April 2026

உங்கள் வாக்கு, உங்கள் உரிமை..உங்கள் கடமை

மனித குல வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஏராளமான ஆட்சியாளர்களை கண்டிருக்கிறோம்." தடி எடுத்தவன் தண்டல்காரன், ஆயுதம் எடுத்தவன் ஆட்சியாளன்" என்கிற நிலைமை மாறி, நமது ஆட்சியாளர்கள் யார் என்று தீர்மானிக்கிற உரிமை இந்த நூற்றாண்டில் தான் கிடைத்திருக்கிறது. 

அவ்வாறு நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை எளிதில் கிடைக்கல்லை. ஏராளமான போராட்டங்களுக்கு பின்னரே கிடைத்துள்ளது. 

நமது ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியாளர்களா என்பதை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை. 

ஆனாலும் அந்த அருமை தெரியாமல் தேர்தலில் பங்கேற்க மறுக்கிறவர்கள் தேர்தலில் அருமை புரியாதவர்கள் என்று தான் பொருள். 

 அரசியலில் பங்கேற்க மறுப்பதற்கான தண்டனைகளில் ஒன்று, உங்களை விட தாழ்ந்தவர்களால் நீங்கள் ஆளப்படுவதுதான் என்கிறார் தத்துவ ஞானி பிளேட்டோ. 

 "ஆட்சி செய்ய மறுத்த ஞானிகள், முட்டாள்களின் ஆட்சியை அனுபவிக்கத் தயாராக வேண்டும்."என்கிறார் பகுத்தறிவு பகலவன் சாக்ரடீஸ். 

"ஊழல் அரசியல்வாதிகள், போலிகள், திருடர்கள் மற்றும் துரோகிகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக உடந்தையானவர்கள்."என்கிறார் ஆங்கில நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர் ஜார்ஜ் ஆர்வெல். 

 "வாக்கு என்பது நீங்கள் வாழ விரும்பும் உலகத்தைப் பற்றிய ஒரு வகையான பிரார்த்தனை என்றுரைக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாப்டிஸ்ட் பாதிரியார் மற்றும் அரசியல்வாதியான ரெவ். ரஃபேல் வார்னாக். 

 "வாக்களிக்காமல் இருப்பது ஒரு எதிர்ப்பு அல்ல. அது ஒரு சரணடைதல்."அமெரிக்க அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் கீத் எலிசன். 

"நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், புகார் செய்வதற்கான உரிமையை இழக்கிறீர்கள் என எச்சரிக்கிறார் அமெரிக்க மேடை நகைச்சுவையாளரும், சமூக விமர்சகருமான ஜார்ஜ் கார்லின். 

"வாக்களிக்காத 'நல்ல' குடிமக்களால் மோசமான அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன." என்று எச்சரிக்கிறார் கிரேக்க ஞானி பிளேட்டோ. 

 "உங்கள் உரிமைகள் அதைப் பொறுத்தவை போல வாக்களியுங்கள், ஏனெனில் உங்கள் வாக்கு உங்கள் குரல்." அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கான சம உரிமைக்காக, காந்திய வழியில் அகிம்சை முறையில் போராடிய மாபெரும் சிவில் உரிமைத் தலைவரான மார்ட்டின் லூதர். 

"ஒரு ஜனநாயகத்தில் ஒரு வாக்காளரின் அறியாமை அனைவரின் பாதுகாப்பையும் சீர்குலைக்கிறது." என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி. 


"வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது."என முழக்கம் இட்டார், அடிமை முறையை ஒழித்த அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். 

 "முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் மௌனமாக இருக்கும் நாளில் நமது வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்குகிறது. என உரைத்தார் அமெரிக்க கறுப்பின உரிமைக்காகத் துணிந்து குரல் கொடுத்த போராளி மால்கம். 

"ஒரு ஜனநாயகத்தில், மக்கள் தங்களுக்கு தகுதியான தலைவர்களைப் பெறுகிறார்கள் என்கிறார் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வங்காரி மாத்தாய். 

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும்  நமக்கு அருமையான வாய்ப்பு, நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தான். 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று ஒதுங்கி விடாமல், நல்லவர்களாக, நாட்டுக்கு உழைப்பவர்களாக  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக, மத நல்லிணக்கத்தை பேணுபவர்களாக, நல்ல கொள்கையுடைய வேட்பாளர்களுக்கு வாக்களித்து உங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுங்கள்.


3 comments:

  1. மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான சிறப்பான முக்கியமான பதிவு தோழர் வரவேற்கிறோம் நன்றி வணக்கம் இனிய நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. திமுக அரசியல் சித்தர்கள் ஆழமான தளம் உள்ளது
    அதிமுக மாற்றாக வேண்டிய கட்சி மறுபடியும் பஜக உடன்
    நதக தீவிரவாதம் தூய்மைவாதம்

    வேறுயார் மாற்று அரசியல் என்பது பெரிய கேள்வியே

    மேதாவிகளும் ஞானிகளும் சித்தர்களும் தமிழக மண்ணில் வாழும் மனிதர்களை தாம் சிக்காமல் சிதைக்க வழி தேடுவதில் அரசியல் அதிகார ஆசன போட்டி உள்ளது.

    தேர்ந்தெடுத்த பின் இந்த அறிஞர்களின் கூவத்தூர் ஆட்டத்தை எங்கே தட்டி கேட்டோம்?

    தற்குறிகள் இவர்களை காட்டிலும் என்ன தீமை செய்து விடுவார்கள்?

    இத்தனை வல்லுநர்கள் எப்படி எதிர்கட்சிகளாக தற்குறிகளை எதிர்க்கின்றனர் என காண ஆவல் உள்ளது.

    வெல்லட்டும் புதியவர்கள். அடுத்த தற்குறி அடுத்த தேர்தலில் உதிக்கும் வரை தற்குறி கொல்லியா அல்லது நன்மையா என்பது தெரியாது. எனவே சோதனை செய்வது அறிவுக்காகவே தவறு இல்லை. அறியாமை நீங்கி அறிவு பிறக்கட்டும்.

    இது 'போகி' தேர்தலாக இருக்கட்டும். ஒலி சத்தமாக இருக்கட்டும்.

    வாழ்க மனிதர்கள்.

    ReplyDelete
  3. திமுக அரசியல் சித்தர்கள் ஆழமான தளம் உள்ளது
    அதிமுக மாற்றாக வேண்டிய கட்சி மறுபடியும் பஜக உடன்
    நதக தீவிரவாதம் தூய்மைவாதம்

    வேறுயார் மாற்று அரசியல் என்பது பெரிய கேள்வியே

    மேதாவிகளும் ஞானிகளும் சித்தர்களும் தமிழக மண்ணில் வாழும் மனிதர்களை தாம் சிக்காமல் சிதைக்க வழி தேடுவதில் அரசியல் அதிகார ஆசன போட்டி உள்ளது.

    தேர்ந்தெடுத்த பின் இந்த அறிஞர்களின் கூவத்தூர் ஆட்டத்தை எங்கே தட்டி கேட்டோம்?

    தற்குறிகள் இவர்களை காட்டிலும் என்ன தீமை செய்து விடுவார்கள்?

    இத்தனை வல்லுநர்கள் எப்படி எதிர்கட்சிகளாக தற்குறிகளை எதிர்க்கின்றனர் என காண ஆவல் உள்ளது.

    வெல்லட்டும் புதியவர்கள். அடுத்த தற்குறி அடுத்த தேர்தலில் உதிக்கும் வரை தற்குறி கொல்லியா அல்லது நன்மையா என்பது தெரியாது. எனவே சோதனை செய்வது அறிவுக்காகவே தவறு இல்லை. அறியாமை நீங்கி அறிவு பிறக்கட்டும்.

    இது 'போகி' தேர்தலாக இருக்கட்டும். ஒலி சத்தமாக இருக்கட்டும்.

    வாழ்க மனிதர்கள்.
    அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...