ஒரு நூற்றாண்டு வெறி
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
**********
இத்தனை மூடத்தனங்களைக் கொண்டிருந்தும், மனித நாகரிகமற்ற போக்கினில் உழன்று கொண்டிருந்தும், இந்தியா முழுமையும் தங்களை மேலும் வளர்த்தெடுக்க, 2025 ஆம் ஆண்டை நூற்றாண்டு லட்சியமாகக் கொண்டு, அடுத்த கட்டத் தலைமுறையை வசப்படுத்தும் வகையில் செயலாற்றி வருவதாக ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டு ஊடகங்களின் முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் (2022) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தான் அவர் இப்படிக் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் தடம் பதிப்பதைத் தங்கள் வாழ்நாள் லட்சியம் என்றே அவர் பேசியுள்ளார். இதற்காகவே நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 1500 ஷாகாக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகின்றது என்றும், மாநில முழுமையும் 600 இடங்களில் வாரச் சந்திப்புகளையும், 400 மாதாந்திரக் கூட்டங்களையும் நடத்தி வருவதாகவும் தத்தாத்ரேயா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.
சமூக நீதியும், மனிதத் தன்மையுமற்ற கருத்துகளைப் பொதுவெளியில் இத்தனை ஆங்காரமாக ஒருவர் பேசுவதை அனுமதிக்கும் இரத்தம் சுண்டிய மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருப்பதைப் பார்க்க நமக்குப் பிரமிப்பு தான் ஏற்படுகிறது. ஆர். எஸ். எஸ். லோகோவில், டாக்டர் அம்பேத்கர் படத்தைச் சேர்த்து இந்திய அளவிலும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் எத்தர்கள் கூட்டம் தான் ஆர் எஸ் எஸ்.
மதத் தீவிரவாதத்திகுப் பின்புலமாக எத்தனையோ திட்டமிடல்கள், ரகசியக் கூட்டங்கள், மாணவர்களைக் குறிவைத்த பயிற்சி முகாம்கள், ஆயுதப் பயிற்சிகள், தூண்டப்பட்ட கலவரங்கள், எதிர் பார்த்திராத ஆனால் திட்டமிட்ட குண்டு வெடிப்புகள் ஆகிய இவையெல்லாம் எங்கள் செயல்பாடுகள் (மகாராட்டிரம், முன்னாள் ஆர். எஸ். எஸ். நிர்வாகி யஷ்வந்த் ஷிண்டேவின் நீதிமன்ற வாக்குமூலம்);
போராடத் தயாராக இல்லாத எதிரிகளைக் கொல்லுதல், குழந்தைகளைக் கொல்வதில் காட்டும் வெறித்தனம், மகளிரைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்தல், வேற்று மதத்தினர் வழிபடுமிடங்களை இடித்தல், மத ஊர்வலங்களை நடத்துதல், அதில் கலவரங்களைக் கட்டாயமாக்குதல், கடவுளின் பெயரால் காலித்தனம் செய்தல்;
இதற்காகச் சமூக அமைப்பு, அரசாங்கத் துறைகள், காவல், ராணுவம் என்று அனைத்திலும் ஊடுருவுதல், ஒரு கட்டத்தில் அனைத்தையும் தன் வயத்தில் வைத்திருத்தல், நூறாண்டோ, எதுவோ வெறுப்பின் உச்சமாகப் பாசிசத்தை நடைமுறைப் படுத்துதல், காட்டு மிராண்டித் தனத்தைக் கட்டவிழ்த்து விடும் மனுநீதியைச் சட்டமாக்குதல், திரேதா யுகத்தின் நீதி பரிபாலனம், அருவருப்பின் உச்சமான நால்வர்ணத்தை அனைவரும் ஏற்கச் செய்தல்;
மொத்தத்தில் மனிதத் தன்மை முற்றிலும் அழிந்த நாடாக இந்தியாவைக் கட்டமைத்தல் ஆகிய இவைதான் ஆர்.எஸ்.எஸ். இன் அஜெண்டா. இதுதான் அவர்களின் நூற்றாண்டுக் கனவு.
இதுவே அவர்களின் நூற்றாண்டு வெறி. வெளியில் இருந்து வந்த வந்தேறி வெறி நாய்கள் பாயத் தொடங்கி விட்டன. பூர்வகுடி மக்களில் பாதிப்பேர் வெறிநாய்க்கடியுடன் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மீதிக் குடிகள் போராடுவதா? வீழ்வதா?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான நம்
எதிரி வெளியே வந்து விட்டான்,
நாம் எங்கே இருக்கிறோம்
என்று தெரியவில்லை;
அவன் வாளைச் சுழற்றிக் காட்டுகிறான்,
இங்கு ஒரு புல் கூட அசையவில்லை;
அவன் நரசிம்ம அவதாரம் என்று,
அவனே சொன்ன கேடுகெட்ட மிருகமாய், அறை கூவல் விடுக்கிறான்,
இங்கு பூனை எழுப்பும் மெல்லிய
முனகல் கூடக் கேட்கவில்லை;
அவன் நம்மிடம் போரிட வரவில்லை.
நம் குழந்தைகளைக் கொல்ல வருகிறான்;
நம் பெண்களை நடுவெளியில்
துகிலுரித்துப் பாலியல்
வன்முறை செய்ய வருகிறான்;
அவன் காலில் விழாத ஆண்களின்
தலையைக் கொய்ய வருகிறான்;
அதையும் அறிவிக்கிறான்.
இங்கோ ஒன்றும் நடக்காதது போல் பஜனை பாடிக் கொண்டும்,
கொலு பொம்மைகள் அடுக்கிக் கொண்டும்,
சூரனை அழிக்கும் விழாக்களைக் கொண்டாடிக் கொண்டும்,
எவ்வுறுப்பும் அற்ற ஈனப்
புழுக்களைப் போலத்
தமிழர்கள் மாறிப் போனதை
நம்பத்தான் முடியவில்லை!
அவனுக்கு இரத்த வெறி
தலைக்கேறி விட்டது.
அவன் விடுவதாக இல்லை.
நாம் மடிவதாய் இருந்தால் கூட,
மானத்தோடு மடிவது தானே நம்
இரண்டாயிரம் ஆண்டுக் காலத்து வழக்கமென்று
நம் இலக்கியங்கள் கூறுகின்றன.
நடத்துங்கள் போரை!
மானமுள்ள ஒவ்வொருவனும்
தன்னை அம்பேத்கர் ஆகவும்,
பெரியார் ஆகவும்
நினைக்க வேண்டும்;
மாற வேண்டும்!
நடத்துவோம் போரை!
சாதி, மத, சனாதனங்களைத்
தகர்த்தழிப்போம்!
பாசிசத்தைக்
குழிதோண்டிப் புதைப்போம்!
மீட்டெடுப்போம் நாட்டை!
(முற்றும்)
-முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.




This message must reach to all of our state.
ReplyDelete