சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 5 April 2026

தேர்தல் திருவிழா 10

 பரிவு சார்ந்த அல்லது அனுதாப காரணிகள்-Sympathy factors. 

 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணிகளில் மிகவும் சக்தி வாய்ந்தது, அதிரடியானது, யாராலும் தடுக்க இயலாத, மாபெரும் விளைவுகளை உருவாக்க கூடியது இந்த காரணி. பரிவு சார்ந்த அல்லது அனுதாப அலை காரணிகள் என்றும் சொல்லலாம். ஆனால் எப்பொழுதுமே வரும் என்று சொல்ல முடியாது. இந்த அலை வீசும் போது இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யக்கூடிய சக்தி கூட எந்த கட்சிகளுக்கும் வந்து விடாது. 

1984 இல் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அது மாபெரும் அதிர்வலையை இந்தியா முழுக்க ஏற்படுத்தியது. அந்த அதிர்வலையோடு நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு நானூறுக்கு அதிகமான  பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அந்தத் தேர்தலின் போது தமிழக முதலமைச்சராக இருந்த திரு எம் ஜி ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவருடைய கட்சியான அண்ணா திமுகவும் காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்தித்தனர் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் வென்றனர்.அத்தேர்தல் சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஒட்டு என்று கிண்டல் அடிக்கப்பட்டது. 

 அதேபோல 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த திரு ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் குண்டு வெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார். அந்த அனுதாப அலையின் விளைவாக தமிழகத்தில் உள்ள   கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதே தேர்தலில் இந்தியா முழுக்க ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடைபெற்ற இடங்களில் காங்கிரஸுக்கு பெரிய அளவு ஆதரவு கிட்டாவிட்டாலும், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற இடங்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது.

1980  ஜனதா கட்சி ஆட்சி வீழ்ச்சி பெற்றதால் நடைபெற்ற தேர்தலில் அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததால் காங்கிரஸ் திமுக கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களை பெற்றது. அந்த நம்பிக்கையில் தமிழக அரசை கலைத்துவிட்டு காங்கிரசும் திமுகவும் கூட்டணி யாக தேர்தலை சந்தித்தனர் மத்திய அரசுக்கு எதிரான மனோ நிலையில் மக்கள் வாக்களித்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், எம்ஜிஆர் அரசு கலைக்கப்பட்டதால் மக்களின் அனுதாபம் திரு எம் ஜி ஆருக்கு இருந்தது. அந்த அனுதாப அலை தமிழகத்தில் திரு எம் ஜி ஆர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவியது.


1957ல் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர் திரு எம் ஆர் ராதா திரு எம் ஜி ஆரை சுட்ட போது கழுத்து வரை கட்டப்பட்ட போஸ்டர் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டது. அப்போஸ்டரும் ஒரு அனுதாப அலையை உருவாக்கியது.

 இம்மாதிரி அணுதாப அலை என்பது எப்பொழுதாவது நிகழும் காரணியாகத்தான் இருந்திருக்கிறது..

இன்னும் யோசிப்போமே... 

1 comment:

  1. அணுதாப பிச்சையும் சில நேர அதிர்ஷ்டம் தான். அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...