ரொனால்ட் ரீகன், அரசாங்கமே பிரச்சினை என்று வாதிட்டார். தாமஸ் சங்கரா வேறு ஒரு கேள்வியை எழுப்பினார். அரசாங்கத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள், அது யாருடைய நலன்களுக்குச் சேவை செய்கிறது?
ஒரு அரசாங்கம் சாக்குப்போக்குகளுக்குப் பதிலாகப் பள்ளிகளைக் கட்ட முடியும் என்பதை சங்கரா நிரூபித்தார்.
ஒரு சில உயரடுக்கு வர்க்கத்தினரைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக, அது இலட்சக்கணக்கான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட முடியும்.
ஊழலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அது அதை எதிர்த்துப் போராட முடியும். வெளிநாட்டுக் கார்ப்பரேஷன்களுக்குப் பதிலாக, அது விவசாயிகளில் முதலீடு செய்ய முடியும்.
பிரச்சினை ஒருபோதும் அரசாங்கத்தின் இருப்பு அல்ல என்று அவர் நம்பினார்.
பிரச்சினை என்னவென்றால், அரசாங்கம் மக்களுக்குச் சொந்தமானதா அல்லது செல்வம் மற்றும் அதிகாரத்திற்குச் சொந்தமானதா என்பதுதான்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் நிறுவனங்கள் தேவை என்பதை வரலாறு காட்டுகிறது. அவற்றால் யார் பயனடைகிறார்கள் என்பதுதான் உண்மையான போராட்டம். அரசாங்கம் சாதாரண மக்களுக்குப் பதிலளிக்கும்போது, அது நீதிக்கான ஒரு கருவியாக மாற முடியும். அது கோடீஸ்வரர்கள், செல்வாக்குக் குழுக்கள் மற்றும் சக்திவாய்ந்த நலன்களுக்குப் பதிலளிக்கும்போது, அது சிலரின் சிறப்புரிமைகளுக்கான ஒரு கேடயமாக மாறுகிறது.
அரசாங்கம் நல்லதா கெட்டதா என்பது ஒருபோதும் கேள்வியாக இருந்ததில்லை. அது யாருக்குச் சொந்தமானது, யாருக்காகப் போராடத் தயாராக இருக்கிறது என்பதுதான் எப்போதும் கேள்வியாக இருந்துள்ளது.
இதிலிருந்து ஆட்சியாளர்களை புரிந்து கொள்ளலாம். ரொனால்ட் ரீகன் என்பது ஒரு தனி நபர் அல்ல, ஒரு அடையாளம், ஆக்கிரமிக்க துடிக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அடையாள உருவம் தான்.
அது ரீகனாக இருக்கலாம், கென்னடியாக இருக்கலாம், ஜிம்மி கார்ட்டராக இருக்கலாம், புஷ்ஷாக இருக்கலாம், ஏன் இன்று இருக்கக்கூடிய ட்ரம்ப் ஆக கூட இருக்கலாம். அது குடியரசு கட்சியோ ஜனநாயக கட்சியோ எல்லாம் ஒன்றுதான். இங்கிலாந்தில் இருக்கக்கூடிய கன்சர்வேட்டிவ் கட்சியோ தொழிலாளர் கட்சியும் இரண்டும் ஒன்றுதான். ஆக்கிரமிக்க துடிக்கும் எல்லா நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். அது மட்டுமே விஷயம் அல்ல பறிகொடுத்து உரிமைக்காக போராடக்கூடிய அல்லது பறிகொடுத்து உரிமையை இழந்திருக்கக்கூடிய எல்லா வளரும் நாடுகளின் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களும் ரீகனுடைய அடையாளம் தான்.
சொந்த காலில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய, கார்ப்பரேட் நலன்களைப் புறந்தள்ளி தங்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட் உடைய சுரண்டலை எதிர்த்து மக்களுடைய செல்வத்தை பாதுகாக்க கூடிய, ஊழலில் திளைத்து நாட்டை குட்டி சுவராக்காமல் நேர்மையாக ஆட்சி செய்யக்கூடிய எல்லா ஆட்சியாளர்களும் தாமஸ் சங்கராவினுடைய அடையாள உருவங்கள் தான். இதற்கென்று எந்த இசத்தின் முத்திரையும் குத்திடத் தேவையில்லை இருப்பதெல்லாம் ஒரே கேள்விதான் நீங்கள் யார் பக்கம் கார்ப்பரேட் பக்கமா மக்கள் பக்கமா அதற்கான பதில் தான் அரசாங்கம் பிரச்சனையா? அல்லது அரசாங்கம் யாருக்கானது என்பது பிரச்சனையா? என்ற கேள்விக்கான பதில்..

பதிவுகள் நல்லாத்தான் இருககு
ReplyDeleteஉலக நடப்பை உடைத்துக் கூறும் உண்மையான ஒரு உரைகல் போன்றது உங்கள் இந்த கட்டுரை. கோவை செல்வராஜ்
ReplyDelete