மாநிலந்தனில்
மானிடர் வாழ்ந்திட
மாடமாளிகையோ
மண்குடிசையோ கட்டிடுவார்...
அனைவருக்கும் பொதுவாம்
அகிலந்தனில் காடுதனை
அழித்திட்டால் - மரந்தனை
வெட்டிட்டால் பறவைதான்
முட்டையிட குஞ்சு பொறித்திட
பிறவிலங்குகள் தாம்வாழ
எங்கு சென்றிடுவார்-இது
அனைவருக்குமான நிலமன்றோ!!

No comments:
Post a Comment