சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 7 July 2026

இயற்கைப் பேரழிவு?!

 

மலைகளை

குடைந்தோம், 

துண்டாடினோம்.. 

மரங்களை 

வெட்டினோம்.. 

மண்ணை

தளர்த்தினோம்.. 

தன்மையை

மாற்றினோம்...

சரிவான 

சாலையமைத்தோம்

வளர்ச்சி என்றோம் அதை.. 

இயற்கையை

சீரழித்தது நாம்.. அதன்

முனுமுனுப்பை

புறக்கனித்தோம்... 

சீறியபோதோ

கதறுகின்றோம்... 

மலை சரிந்தபோது, ​​ 

இயற்கைப் பேரழிவென

வெட்கமின்றி மொழிந்தோம்.... 

மாறிவிடவில்லை

இயற்கை 

ஒரே நாளில்... 


காத்திடாவிடிலோ

கானாமல் 

போய்விடும் 

பூவுலகு... 


No comments:

Post a Comment

உலகம் சந்தித்த சுதந்திரப்போராட்டங்கள்

  உலக ஆக்கிரமிப்பாளர்களில் எந்த ஆக்கிரமிப்பாளர் நல்லவர்? ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால், நம்முடைய பழைய அதி மேதாவிகள் அவ்வப்போது பீத்தி...