சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 8 July 2026

மாசு குறைத்திடுவீர்..



மாசுபடுத்திடா வாகனம் தனை

மாநிலத்தில் ஓட்டுகிறேன் யான்

மாசுபடுத்திட வில்லை யென

மார்தட்டிக் கொள்வோரே-டயர்

தேய்ந்து போவதாலே ரப்பர்

துகள்கள் தாம் மண்கலந்து

தண்ணீரில் ஆற்றில் குளத்தில் 

கடலில் மாசுபடுத்துவதை அறிவீரா... 


பார்ப்பதில்லை அதை கண்களால் 

நுகர்வதுமில்லை வாசனைதனை

உணர்வதுமில்லை பகுத்தறிவாலே

பேசுவதும் இல்லைநீவிர் பெரும்பாலும்... 

மீன்கள்  தவளைகள் தாவரங்களென

மனிதனை தவிர அனைவருமறிவார். 

தூசு புகை மட்டும் மாசல்லவே-டயர் 

துகளும் மாசு தானே உலகில்... 


இயன்ற வரை நடந்திடுவோம்-இல்லை 

எனில் பொதுப் போக்குவரத்து தனை,

இயன்றவரை வாகனம் குறைத்து புழங்கி

இனிதாக வாழ்ந்திடுவீர் இன்னுலகிலே.. 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...