இயற்கை மறப்பதில்லை
எதனையும் பூவுலகில்...
நீர் மறப்பதில்லை - தான்
சென்ற பாதைதனை..
நீர் மறப்பதில்லை- ஏரி
இருந்த இடம் தன்னை..
நீர் மறப்பதில்லை - ஈரநிலம்
சுவாசித்த இடம் தனை...
நீர் மறப்பதில்லை - ஆறு
சென்ற பாதை தனை..
அத்தனையும் விழுங்கியதோ
அடுக்குமாடி வீடுகள் சாலைகள்...
அழைக்கிறார்கள் அதை
வளர்ச்சியென்ற பெயராலே...
பெருமழை பெய்ததும் தேடுதே
நீர் தன் இடம் தன்னை..
மற(றி) க்கிறாரே மனிதர்கள்
நீரின் பாதை தனை...
அழைக்கிறார் புதுப்பெயரிட்டு
வெள்ள பிரச்சினை என்றே..

No comments:
Post a Comment