சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 July 2026

வளர்ச்சி எனும் வீழ்ச்சி.

அவர்களின் காடுகளை அழிக்கிறோம்

அவர்களின் வாழிடத்தை அழிக்கிறோம்

அழகழகாய் வீடுகள் கட்டுகிறோம் 

அதனை வளர்ச்சி என அழைக்கிறோம்... 

அவர்கள் வெளியேற்றம் என்கிறார்கள் 


அவர்கள் உணவு, தேடி வருகையில்

அச்சுறுத்தல் அழைக்கிறோம் நாம்...

ஆக்கிரமித்து துரத்தியவர்கள் நாம் 

ஊடுருவியவர்கள் என்றழைக்கிறோம்

அவர்களை முரண்நகையாக


நமது நிலத்திற்குள் நுழையவில்லை.

நாம் தாமே நுழைந்திருக்க்கிறோம்... 

வாழ்க்கையை தருவதே வளர்ச்சி - பிறர் 

வாழுமிடம் அபகரிப்பு என்பது வீழ்ச்சி. 

உணர்ந்தால் உண்டாகும் மகிழ்ச்சி.. 



No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...