சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 11 July 2026

புவி காத்திடுவோம்

 

காடுகளை அழித்து கழனியாக்கலும். 

 கழனிகளை அழித்து நகராக்கலும் , 

ஆறுகள் மறித்து அணை கட்டலும், 

வளர்ச்சியென பெருமிதம் கொள்வோம்.


காடுகள் வெட்டி பொட்டலாக்கி- பயனில்லா

மருந்துகளிட்டு மண்ணைக்கெடுத்து, 

கழிவுகள் விட்டு ஆற்றை நஞ்சாக்கிட்டு

மாபெரும் அறிவியல் சாதனையென்போம்


வனவாசியை வனச்சட்டம்காட்டி, 

சிறுதொழில் புரிவானை  - மாசு

கெடுப்பானென  பிடித்து சிறை

 தள்ளி காத்திடுவோம் புவிதனை.. 




         

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...