தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்". என்கிறார் திருவள்ளுவர்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
பொய் என்று எதைச் சொல்லுகிறார் வள்ளுவர்.. சாதாரணமாக அன்றாட வாழ்வில் மனிதன் பேசுகின்ற பொய்களையா? சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, அல்பமானதோ அல்லது மிகப் பெரியதோ எம் மாதிரி பொய்களை திருவள்ளுவர் இங்கு உரைக்கிறார்? ஒருவனுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று எண்ணத்திலோ, அல்லது ஏமாற்ற வேண்டும் என்றோ, அல்லது அறியாமல் தீங்கிழைத்து விட்டு அதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது என்றோ, பொய்யுரைக்கிறார்களா?
அப்படிப் பார்த்தால் உலகில் பல மனிதர்கள் பலரிடம் எல்லா காலத்திலும் பொய்தான் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்களுடைய மனசாட்சி அவர்களை சுட்டுருக்கிறதா? அவர்களது மனசாட்சியை அவர்களை தண்டித்து இருக்கிறதா?!
பொய்யுரைக்காத அரசியல்வாதி இருக்கிறாரா? வழக்கறிஞர் இருக்கிறாரா,? வியாபாரி இருக்கிறாரா,? அலுவலர்கள் இருக்கிறார்களா? பல்துறைகளில் தம் வாழ்வுக்காக தம் மேம்பாட்டுக்காக தம் சுகத்திற்காக பிறரை ஏமாற்றி பொய்யுரைப்போர் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதையும் தாண்டி அல்ப சுகத்திற்காக பிறரை புண்படுத்துகிறது, இழிவுபடுத்தி துன்பப்படுத்தி, அதை மறைத்திட பொய்யரைத்து மகிழும் அல்பர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..
அதாவது திருவள்ளுவர் கூறியிருப்பது மனசாட்சி உள்ள மனிதர்களைத்தான். மனசாட்சியை மறந்த மனிதர்களை பற்றியல்ல...
எப்படி கற்றறிந்தோரெல்லாம் சான்றோர் இல்லையோ அவ்வாறே மனித உருக்கொண்டோரெல்லாம் மனிதர்கள் அல்ல. மனசாட்சி உள்ளவனே மனிதன் என்ற நோக்கில் தான் திருவள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார்..
No comments:
Post a Comment