எனது இணையர் தான் பார்த்த வீடியோ காட்சி ஒன்றை அனுப்பி வைத்தார். பார்க்க வேடிக்கையாய் இருந்தது. பல நையாண்டி நகைச்சுவைகளை நம் வாழ்நாள் முழுவதும் பார்த்திருக்கிறோம். குறிப்பாக மருந்தாளுனர்கள் மருத்துவர்கள் பற்றிய கேலிச்சித்திரம் அது.
ஒரு நபர் மருந்து கடையில் (அந்தக் கடையில் ஸ்டேஷனரிகளும் விற்பார்கள் போலிருக்கிறது) சென்று பேனா ஒன்றை வாங்குகிறார். நன்றாக எழுதுகிறதா என்று பார்ப்பதற்காக ஒரு வெள்ளைத் தாளில் கிறுக்குகிறார். இது உலகில் எல்லோருமே செய்யக்கூடிய வேலை தான். புதிதாக கையில் பேனா கிடைத்தவுடன் நன்றாக எழுதுகிறதா என்று பார்ப்பதற்கு கையெழுத்து போடுவார்கள் அல்லது ஏதாவது கிறுக்கிப் பார்ப்பார்கள். கொடுத்தவர் உள்ளே போவார். அடுத்து வந்த பணியாளர் அந்த பேப்பரை எடுத்து வேகமாக அங்கிருக்க கூடிய மருந்துகளை தேடி எடுத்து வைத்துவிட்டு, பில் போட்டு மருந்தை கொடுத்து பணம் கேட்பார். பேனா வாங்க வந்தவர் முழித்து நிற்பார். எதை கிறுக்கினாலும் மருந்தாளுனர் ஒரு மருந்து எடுத்துக் கொடுத்து விடுவார் என்று நையாண்டியாக சொல்லுகிற விஷயமிது.
ஒரு மருத்துவர் தனது மனைவி மீது மிகவும் அன்பாய் இருப்பார். அவரை மனைவி செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் உடனுக்குடனே பாராட்டக்கூடியவர். அன்றைக்கு வீட்டில் காலையில் மனைவி சுட்டுக் கொடுத்த தோசை மிகவும் சிறப்பாக இருந்தது சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பியவர், அவரிடம் தோசைக்கு நன்றி சொல்லவில்லையே என்று தோன்றியது. அவரது மனைவி வெளியே கடைக்கு சென்றிருந்தார். அவசரமாக வெளியே செல்ல வேண்டியதால் ஒரு துண்டு சீட்டில் அன்பே, நீ சுட்டுக் கொடுத்த தோசை மிக சிறப்பாக இருந்தது. நன்றி முத்தங்களுடன் என்று கையெழுத்திட்டு எழுதி வைத்து கிளம்பி விட்டார். அவருடைய மனைவி அந்த சீட்டை பார்த்து அவருடைய கிறுக்கெழுத்து ஒன்றுமே புரியவில்லை. அவருடைய கையெழுத்தை நன்கு புரிந்தவர் மருந்தாளுநர் தானே என்று அவரிடம் துண்டு சீட்டை கொடுத்தார். அவரும் அந்த துண்டு சீட்டைப் பார்த்துவிட்டு உடனே இரண்டு மாத்திரைகளை எடுத்து அனுப்பினார்.
உண்மையில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எழுதுகிற சீட்டு அவ்வாறு தான் இருக்கும். சாதாரணமாக மருந்தாளுனரும் அதை பார்த்து மாத்திரைகள் எடுத்து கொடுத்து அனுப்புவார்கள். அதில் மாபெரும் ரகசியம் அடங்கி இருக்கிறது. ஏன் அப்படி புரியாத மாதிரியாக எழுதுகிறார்கள் என்று பெரிய ஆராய்ச்சியே நடத்தலாம். அந்த காலத்தில் எந்த மருந்து என்று மருத்துவருக்கும் மருந்தாளுநருக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று லத்தீன் மொழியில் எழுதுவார்கள். அது அவர்களுக்கு இருவருக்கு மட்டும் தான் புரியும். மருந்து கொடுக்க வேண்டிய முறை பற்றியும் இலத்தினில் தான் எழுதுவார்கள். ஏனெனில் லத்தின் மொழி செத்த மொழி. நடைமுறையில் இல்லாத மொழி. அதில் எழுதினால் மற்றவர்களுக்கு புரியாது. இந்த சங்கேத மொழி ரகசியமாக இருக்கட்டும் என்று எழுதினார்கள். உதாரணத்திற்கு மிக்சர் கார்மினெட்டிவ் (Mixture Carminative) என்று ஆங்கிலத்தில் உள்ளதை mixtura carminativa மிஸ்டுரா கார்மினேடிவா தான் என்று எழுதுவார்கள். மூன்று வேலைக்கு என்று எழுதுவதை Ter in dier டெர் இன் டை. என்று குறிப்பிடுவார்கள். சாப்பாட்டுக்கு பின் என்றால் போஸ்ட் சிபம் Post cibum என்று எழுதுவார்கள்.
இந்த மாதிரி ரகசியமாக எழுதுவது என்பதெல்லாம் காலாவதியான விஷயம். அப்புறம் ஏராளமான புதிய புதிய மருந்துகள் எல்லாம் வந்து விட்டன. நோயாளிகளை மருந்தின் பெயரைச் சொல்லி கேட்கக்கூடிய காலமாக மாறிவிட்டது. அதனால் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இந்த புதிய மருந்துகள் யாருக்கும் புரிய கூடாது என்ற நினைத்து தான் மருத்துவர்கள புரியாத மாதிரி பிரித்து எழுதுகிறார்களோ என்று எண்ணலாம். விஷயம் வேறொன்றும் இல்லை. ஏராளமான கூட்டம் வந்துவிட்டது. நிறைய மருந்துகள் எழுத வேண்டி உள்ளது. காலம் முன்பு வரை அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் மக்கள் இருந்தார்கள். ஏராளமாக கூட்டம் வந்தது. போதுமான மருத்துவர்கள் இல்லை. அதனால் மருத்துவர்கள் வேக வேகமாக எழுதும் போது சுருங்கி சுருக்கெழுத்து கிறுக்கெழுத்தாகவே மாறிவிட்டது. அது மருத்துவருக்கும் மருந்தாளுனர்களுக்கும் மட்டுமே புரியக்கூடிய எழுத்தாக மாறிவிட்டது.
என்னுடைய வாழ்க்கையில் இது மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. நான் தலைமை மருத்துவமனையில் பணியாற்றியபோது அங்கு ஒரு மருத்துவர் இவ்வாறு தான் எழுதுவார். அதை ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு எழுத்து. அவருக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. நோயாளியை அந்த மாத்திரை வாங்கியவுடன் கொண்டு வந்து அவரிடம் காட்டிவிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லி இருப்பார். அவ்வாறு ஒரு முறை மாத்திரை கொடுத்த போது அந்த நோயாளி மருத்துவரிடம் சென்று பெற்ற மருந்தினை காட்ட, நான் எழுதியது எவ்வளவு இவன் என்ன குறைத்துக் கொடுத்திருக்கிறான் என்று காச்சு மூச்சு என்று கத்திவிட்டு, என்னை நேரில் அழைத்து கேவலமாக திட்டி விட்டார். நான் கொந்தளித்துப் போனேன். அருகில் இருந்த மருத்துவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அந்த மருத்துவருக்கு என்னைப் பற்றி ஏற்கனவே தெரியும். மாத்திரை சீட்டில் எந்த குறை இருந்தாலும் உடனே எடுத்து சென்று நான் கையோடு திருத்தி தான் மாத்திரை வழங்குவேன். ஒரு முறை ஒரு மருத்துவர் எழுதுவதற்கு டயசிபம் பதிலாக டிசாக்சின் என மாற்றி எழுதி விட்டார். இரண்டும் வேறு வேறு பயன்பாடு உள்ளவை. உடனே அதை சென்று திருத்தி வந்தேன். அந்த நிகழ்ச்சியின் போது இருந்த மருத்துவர் என்பதால் என்னைப் பற்றி தெரியும்.
நான் கோபத்தோடு அந்த மருந்து சீட்டுடன் , அந்த நோயாளியை கைப்பற்றாக பற்றி அந்த மாத்திரைகளையும் கையில் எடுத்துக் கொண்டு நேரே இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று விட்டேன் .
நான் கோபமாக இருந்ததை புரிந்து கொண்ட இணை இயக்குனர் என்னை சமாதானப்படுத்தி என்ன சொல்லுங்கள் என்றார். இணை இயக்குனரிடம் அந்த மருந்து சீட்டை கொடுத்து இதில் என்ன மாத்திரை என்ன எண்ணிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது என்று தயவு செய்து படித்து சொல்லுங்கள் சார் என்றேன்.
அவர் பார்த்துவிட்டு இது என்ன கோழி கிறுக்கியது போல இருக்கிறது. எழுத்தும் புரியவில்லை எண்ணிக்கையும் தெரியவில்லை என்றார்.. இப்படி ஒரு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு அந்த மருத்துவர் என்னை நோயாளி முன்பு அவமரியாதை செய்து விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், என்னை சமாதானப்படுத்திய மருத்துவர் அந்த அறைக்கு வந்து விட்டார். அவர் இணை இயக்குனரிடம் அவர் கார்த்திகேயன் சாருக்கு கோபமே வராது அவரே கோபப்படும்படியாக அந்த மருத்துவர் திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டார். அப்புறம் ஒரு வழியாக பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.
அந்த மருத்துவர் என்னை திட்டிய மருத்துவரிடம் ஓய்வறையில் சென்று என்னைப் பற்றி விளக்கமாக சொன்ன பிறகு மறுநாளைக்கு என்னை திட்டிய மருத்துவர் என்னிடம் வந்து வருத்தம் தெரிவித்து விட்டு சென்றார். அதன் பிறகு நாங்கள் மிகவும் நெருங்கிய நட்போடு பழக ஆரம்பித்தோம். அது வேறு விஷயம்.
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம் எழுதுகிற மருந்து கொடுக்கிறவருக்கும் புரிய வேண்டும் என்று மருத்துவர்கள் உணர்வதில்லை.
இன்று உலக அளவில் எல்லா நாடுகளிலும் மருந்துகளின் ஜெனரிக் பெயர் தான் பயன்படுத்த வேண்டும் என்று நடைமுறையில் உள்ள போது, இந்தியா மாதிரி நாடுகளில் தான் வியாபார பெயரான ட்ரெய்லர் நேமில் மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. ஒரு மருந்து இன்று சந்தையில் ஆயிரம் விற்பனை பெயரில் உள்ளன என்று இந்த சமுதாயம் என்று உணரப்போகிறது. மருந்துகளின் பெயரை தெளிவாக ஜெனரிக் பெயரில் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை. பொதுமக்களிடம் திட்டுவாங்கி அவதிப்படுவது மருந்து ஆளுநர் மட்டுமே.
Iஇன்றாவது பரவாயில்லை! உங்களை போன்ற விவரம் அறிந்தவர்கள் இருக்குறீர்கள் வழி நடத்த. நாளைய சமுதாயத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது!
ReplyDeleteOnline prescription சிஸ்டம் வந்தாலும் பார்மசிஸ்ட் சில மருந்துகள் டாக்டர் எழுத வில்லை என்பார் அல்லது 30 இல்லை 20 தான் எழுதியுள்ளார் என்பார் நோயாளி ஏற்கெனவே பல மணிநேரம் காத்திருந்து மருத்துவரை பார்த்திருப்பார் மீண்டும் நேரம் செலவிட விரும்பாமல் வீட்டுக்கு திரும்புகிறார்.இடைபட்ட நோயாளிகளுக்கு மருத்துவர் உண்மையிலியே என்ன மாத்திரை / ஆயிண்ட்மென்ட் / டானிக்/ எவ்வளவு 25mg/50mg power ? என நோயாளிகளுக்கு தெரிய வாய்ப்பில்லாத நிலை
ReplyDeleteAs per patients right to information is failure / lake
By Online app patient must RIGHT TO KNOW ALL ABOUT HIS ILLNESS
DeleteTREATMENT TO BE GIVEN
BY DRUGS ORAL / INJECTION OR ANY PROCEDURE/ PHYSIOTHERAPY/etc how many days / Medical lab test to be done results etc by online
Online வந்த பிறகு Government hospital களில் OP ticket வாங்க QR CODE SCAN PATIENT ITSELF FILL DETAILS IN HIS MOBILE GET REGISTRED VIA OTP Dr cabin # Q Nth number of patient & current Number of the patient Dr attending patient likely to meet his time slot as per regn.Number As per his illness specality Dr. Can meet instead of standing in Q for OP TICKET
ReplyDeleteThough the prescription is sent to the pharmacy name and strength of all medications will be written by the doctor on the op chit. So there u can know all those things. Also if you wait for some time the pharmacist will surely explain the name strength dose of the medicines including the ointment and all.. if you want any more explanation pl chat to the no.9894730508 . Selvaraj.Retired medical store officer Coimbatore.
ReplyDelete