சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 8 October 2026

அன்பு மொழி

 


"அன்பு எதையாவது கொடுக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைகிறது. அகங்காரம் எதையாவது எடுத்துக்கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி அடைகிறது."-ஓஷோ

இந்த மேற்கோள் அன்பையும் அகங்காரத்தையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்கிறது, அதே சமயம் அகங்காரம் உடைமை மற்றும் கட்டுப்பாடு மூலம் திருப்தியைத் தேடுகிறது. உண்மையான மகிழ்ச்சி, சேர்ப்பதாலோ அல்லது சுயநல ஆசையாலோ வருவதில்லை, மாறாக தாராள மனப்பான்மையிலிருந்தே வருகிறது

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர். அவரே அகங்காரம் கொண்டவர். 

அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

அனைத்து உயிர்களிடத்தும் நிபந்தனையின்றி நல்லெண்ணம் காட்டுவதே உண்மையான அன்பாகவம் எஎன உரைக்கிறார் புத்தர். 

பற்றுதல் என்பது தனக்கு எதையோ எதிார்ப்பார்ப்பது அல்லது சார்ந்திருப்பது; ஆனால் புத்தர் போதித்த அன்பு எதையும் எதிர்பாராமல் அனைத்தையும் அரவணைப்பது.

எடுத்துக் கொள்ளுதல் தனிஉடைமைக்கோட்பாடின் அடிப்படையிலானது. பிறருக்கு குறிப்பாக தேவைப்படுபவருக்கு கொடுத்தல் பொதுவுடமைக் கோட்பாட்டின் அடிப்படையிலானது. 


1 comment:

  1. Very true.
    அகங்காரம் கொண்டவர்கள் அன்பை வெளிபடுத்த தயங்குவார்கள்.

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...