சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 3 October 2026

ஊர் சவுக்கை

 

 ஊருக்குள் நுழைகையிலே 
வரவேற்கும் ஆலமரம்... 
அடியிலே நாலு கால் கொட்டகை..
நாலுபேர் தூங்க 
நாலுபேர் அரட்டை என
எப்பவுமே ஆளிருக்கும்... 
புதுசா ஆளு வந்தா
விசாரணை அங்க தொடங்கும்... 
பத்து பேரு சேர்ந்தா பஞ்சாயத்து 
ஊரே கூடி நின்னா ஊர் கூட்டம் 
உள்ளூருக்கு அதுதானே உச்சநீதிமன்றம்
திருவிழா நல்லது கெட்டது
அங்க தானே முடிவாகும்... 
எழவு ஏதோ விழுந்ததாலே 
இன்னைக்கு விடுமுறையாம். 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...