சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 10 October 2026

போரிக்கெதிரான சங்ககால பாடல்

 வீரமும் காதலும் தமிழருக்கு இரு கண்கள் என்று சங்ககால பாடல்கள் பெரும்பாலும் போற்றி வந்துள்ளன. 

வீரத்தின் மறு பக்கம் போர். போர் என்றாலே இருபக்க நியாயம் இருக்கும்.. ஒரு தரப்பு நியாயமெனில் மறு தரப்பு அநியாயமாக தான் இருக்க முடியும். மண்ணுக்காய் போர்.. பொண்ணுக்காய் போர்.. பெண்ணுக்காய் போர்... ஏன் வறட்டு கௌரவத்துக்கும் கூட போர் என போருக்கு ஏராளமாய் காரணங்கள் இருந்திருக்கும்.. 

போரின் விளைவுகள் எப்பொழுதுமே உயிர் சேதம் பொருள் சேதம் என  இரண்டுமே இருக்கும். கைப்பற்ற ஒரு போரெனில் காப்பாற்றிக்கொள்ள மறு போர். போரின் விளைவாய், பலி வாங்கிட இன்னும் ஒரு போர்... என போரின் தொடர்கதை என்பது நீண்டு கொண்டே இருந்தது. இதனால் சீரழிந்தது மன்னர்  படைகளும் மட்டுமல்ல... சாதாரண குடிமக்கள் தான்.  சாதாரண மக்களின் வாழ்க்கை அழிவுக்கு பின்னால் மீண்டு வர எவ்வளவு காலம் பிடித்திருக்கும். 

 போரின் கொடுமைகளுக்கு எதிராக பாடப்பட்ட ஒரு சங்க கால இலக்கிய பாடல்இது. 

பொதுவாக தமிழ் சங்க இலக்கிய பாடல் என்றாலே காதலும் வீரமும் பற்றித்தான் எழுதப்பட்டது. அவ்வாறு பாடிய புலவர்கள் பரிசில்களை பெற்றிருப்பார்கள். போரும் அதன் வெளிப்பாடாக, போரிலே வீரர்கள் காட்டிய வீரத்தையும் வெற்றியையும் பற்றியே அதிகமாக பாடி இருப்பார்கள். 

ஆனால் போரின் விளைவாக ஏற்பட்ட பாதகமான விளைவுதனை விளக்கி இருக்கும் பாடல்களும் உண்டு. 

        "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்பது புறநானூற்றில் 112-ஆவது பாடலாக அமைந்துள்ள புகழ்பெற்ற சங்க இலக்கியப் பாடலாகும்.

பாடலின் பின்னணி

• ஆசிரியர்: கபிலர் (அல்லது பாரி மகளிர் - பாடலில் அவர்கள் கூற்றாக அமைந்துள்ளது).

• பாட்டுடைத் தலைவன்: வள்ளல் வேள் பாரி.

•  கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் மாபெரும் புகழ் பெற்ற குறுநில மன்னர் அவரை வீழ்த்துவதற்காக மூவேந்தர்களும் அவரை பிடிக்காத குறுநில மன்னர்களும் ஒன்று சேர்ந்து படையெடுத்து பாரி மன்னனை கொன்று பரம்பு நாட்டை கைப்பற்றுகிறார்கள் .பாரி மன்னன் இறந்த பிறகு, அவனது மகள்களான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோரை கபிலர் பாதுகாத்து அழைத்துச் செல்கிறார். பாரி இறந்த பிறகு வந்த முதல் முழு நிலவு நாளில், கடந்த ஆண்டு இதே நிலவில் இருந்த மகிழ்ச்சியையும், தற்போது தந்தையையும் இழந்து நிற்கும் துயரத்தையும் எண்ணிப் பாரி மகளிர் கண் கலங்கிப் பாடிய இரங்கல் பாடலாகும் இது.

முழுப் பாடல் வரிகள்

"அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவோடு,

எந்தை ஊமன்மார்; எம் குன்றும் பிறர்கொண்டார்;

சுற்றத்து கீழ்த் தோழிகாய்

சுற்ற மழிந்தனம் யாமே!"

கடந்த ஆண்டு இதே போன்ற வெண்ணிலா நாளில், எங்களிடம் எங்கள் தந்தை பாரி இருந்தார்; எங்கள் பறம்புமலையை யாரும் கைப்பற்றவில்லை. ஆனால், இன்றைய இந்த வெண்ணிலா நாளில், எங்கள் தந்தை எம்முடன் இல்லை; எங்கள் மலையையும் மற்றவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இப்போது நாங்கள் உறவுகளையும் இழந்து தவிக்கிறோம் என்று பொருள்பட அங்கவையும் சங்கவையும் அரற்றுகிறார்கள். தாய்தந்தையர்,உடைமைகள், சொத்துக்கள், உறவினர்கள், நன்பர்கள் அத்தனையும் இழந்து அநாதைகளாய் கையறு நிலையில் நிர்க்கதியாக நிற்க தேர்தலே போர் மக்களுக்கு அளித்திடும் பரிசாகும். எக்காலத்திலும் ஒழிக்கப்பட வேண்டிய கொடுமையானது போர்.... 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...