சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 8 October 2026

முட்டாள் ராஜ்ஜியத்தில்...

 ஒரு முட்டாள் அதிகாரத்திற்கு வரும்போது, ​​அவன் முதலில் செய்வது அறிவாளிகளை மௌனமாக்குவதுதான்; அடுத்து அவன் தன்னைச் சுற்றி மற்ற முட்டாள்களைச் சேர்த்துக்கொள்கிறான்; இறுதியாக அவன் நாட்டை அழித்துவிடுகிறான். - பிளேட்டோ..

சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன் ஏதேன்ஸ் நகரில் பிறந்த மாமேதை பிளாட்டோவின் தத்துவ மொழி தான் இது... 

பதவி வெறிகொண்டு முட்டாள்கள் ஆட்சிக்கு வரும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஒரு தத்துவ ஞானி கூறுகிறான் என்றால் , அது அவன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய அனுபவங்களில் இருந்து வந்த மொழியாகத்தான் இருந்து விட முடியும். 

அந்த அறிவாளிகளுடைய சொல் என்பது உலகிற்கு வழிகாட்டக்கூடிய அனுபவமொழியாகத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும். 

நல்ல அறிவாளிகள் ஆட்சிக்கு வரும்போது ஆட்சியை திறம்பட நடத்திட அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சென்றிட முயன்றிடுவார்கள். 

அதற்காக தமது அவையிலே நல்ல புத்திமான்களையும் அறிவாளிகளையும் அனுபவசாலிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். அனைவருடைய ஆலோசனைகளையும் கேட்டு சிறந்ததோர் முடிவெடுத்து நடைமுறைப்படுத்திடுவார்கள்.

 மாற்றுக்கள் கருத்துக்கள் வந்தாலும் அவற்றையும் ஏற்று சரி தவறு எது என்பதை தமதுபுத்தி கூர்மையால் உணர்ந்து நல்லாட்சி புரிந்திடுவார்கள். 

ஆனால் முட்டாள்கள் ஆட்சிக்கு வந்தால் நேர் மாறாக அறிவாளிகளை அவையின் பக்கமே வரவிடாமல் செய்து விடுவார்கள். அவர்கள் தமக்கு புகழ் பாடக்கூடிய ஜால்ராக்களையும் அல்லக்கைகளையும் அருகிலே சேர்த்துக் கொள்வார்கள். 

மாற்றுக்கருத்துகள் வந்தால் அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். திருக்குறள்

இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான் என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. 

ஆனால் அவர்களுக்கு அவற்றைப் பற்றி எல்லாம் கவலை இருக்காது அடுத்தபடியாக தம்மை போலவே அடிமுட்டாள்கள் எல்லாம் தம் கூட சேர்த்துக் கொள்வார்கள் அதுதானே அவருக்கு வசதி அவருக்கு வேண்டியது எல்லாம் அவர் சொல்வதை கண்முடித்தனமாக கேட்டுக் கொள்ளும் அவரை போலவே உள்ள அடிமுட்டாள்கள் மட்டுமே

.விளைவு என்ன இறுதியாக நாடிய அழிந்து நாசம் ஆகிவிடும்.

இது வெறும் சாபம் அல்ல வரலாறு நமக்கு காட்டிடும் பாடம் இதுவரை உருவான பல அரசுகளில் முட்டாள்கள் தலை எடுக்கும் போதெல்லாம் அந்த நாடு என்ன கதிக்கு ஆளானது என்பதை அடுத்த தலைமுறைக்கு வரலாறு ஆகவே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

உதாரணம் இட்லர், முசோலினி............

உங்கள் அனுபவத்தால், வரலாற்று, அரசியல் ஞானத்தால் விட்டுப்போன பெயர்களை நிரப்பிக்கொள்வீராக... 

1 comment:

  1. சிறந்த இன்றைய நாட்டுக்கு தேவையான அனைவரும் மறந்த ஆலோசனை

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...