சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 7 October 2026

மனித உரிமை மீறலா... அப்படி என்றால்?

 ஒருமுறை முல்லா அவர்களை நீதிபதியாக மன்னர் நியமனம் செய்திருந்தார். ஒரு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. நடுநாயகமாக கம்பீரத்தோடு அமர்ந்து வழக்கினைவிசாரிக்க ஆரம்பித்தார். 

முதலில் வாதியை அழைத்து வாதியின்  வழக்கை பற்றியும், அவர் தரப்பு நியாயங்களை பேச சொன்னார். 

வாதி தனது தரப்பு நியாயத்தை மிகப் பிரமாதமாக எடுத்துரைத்தார். உருகிப்போன முல்லா சொன்னார் "நீ சொல்வது சரியே" 

உடனே முல்லாவின் உதவியாளர் "ஐயா நாம் உடனே ஒருதரப்பு நியாயத்தை மட்டும் வைத்து அவ்வாறு கருத்து கூறி விடக்கூடாது. பிரதிவாதியுடைய கருத்தையும் கேட்க வேண்டும்" என்றார். "ஆமாம் நீ சொல்வது சரியே" என்று கூறிவிட்டு பிரதிவாதியை அழைத்து அவர் தரப்பு நியாயத்தை விளக்கச் சொன்னார். 

பிரதிவாதி தரப்பும் தன் பக்கத்து நியாயத்தை எல்லாம் மிகவும் உருக்கமாக எடுத்துரைத்தார்கள். 

கேட்டுக் கொண்டிருந்த முல்லா உருகிப் போய்" நீ சொல்வதும் சரியே" என்றார். 

முல்லாவின் உதவியாளர் தலையை பிய்த்துக் கொண்டார். 

""ஐயா யாராவது ஒருவர் சொல்வது தானே சரியாக இருக்க முடியும். அப்படி என்றால் மற்றவர் சொல்வது தவறாக தானே இருக்க முடியும்" என்றார். 

உடனே முல்லா" ஆமாம்.. ஆமாம்.. நீ சொல்வதும் சரியே" என்றார். 

அந்த கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இது மாதிரி கூத்துக்கள் எல்லாம் நிறையவே செய்யும். 

ஐக்கிய நாடுகள் சபை, 2026 இல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.

 ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு, 2026 பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களின் போது அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்புவதற்கு "நியாயமான காரணங்கள்" இருப்பதாகக் கண்டறிந்தது.

மினாபில் உள்ள ஷஜாரே தய்யேபே தொடக்கப் பள்ளி மீதான தாக்குதலை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்தனர், இதில் சுமார் 120 குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை ஒப்புக் கொண்டு, . அந்தப் பள்ளி ஒரு இராணுவ இலக்கு என்பதை அமெரிக்கா முறையாகச் சரிபார்க்கத் தவறியதாகவும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் அக்குழு முடிவு செய்தது.


இரண்டாவது தாக்குதல் லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தையும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியையும் தாக்கியதில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்த ஆயுதம் அப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான டங்ஸ்டன் துண்டுகளைச் சிதறடித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மூலம் நியமிக்கப்பட்ட சுதந்திரமான நிபுணர்களின் கண்டுபிடிப்புகளே தவிர, ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அல்ல. அக்குழு யாரையும் வழக்குத் தொடர முடியாது, ஆனால் அதன் சான்றுகள் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கலாம். அவ்வளவே... 

அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை ஈரான் தரப்பு மனித உரிமை மீறல்களை பற்றியும் கருத்து தெரிவித்தது

அதே அறிக்கை, உள்நாட்டுப் போராட்டங்களை அடக்கும்போது ஈரானிய அதிகாரிகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தார்கள் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது..

 அதாவது இவரும் தான் தவறு செய்தார், அவரும் தான் தவறு செய்தார் என்று கூறுகிற வேலை தான் அது. வேறு ஒன்றும் இல்லை. 


டிரம்ப் நிர்வாகம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது, அதே நேரத்தில் மினாப் தாக்குதல் குறித்த தனது விசாரணை தொடர்கிறது என்று பென்டகன் கூறுகிறது. லமெர்ட் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.

ஆக மொத்தத்தில் எந்த நீதியும் கிடைக்காத, மனித உரிமை மீறலுக்கு யாரும் பொறுப்பேற்காத, ஒரு உருப்படாத ஆய்வுதான் அது. 

அதாவது செயல்பட சக்தி அற்ற, யாரையும் கண்டிக்கவோ, தண்டிக்கவோ அதிகாரம் இல்லாத ஒரு வெட்டி சபை தானே அது. 


பொறுப்புக்கூறல் என்பது உலகளாவிய அளவில் பொருந்த வேண்டும். அமெரிக்க, ஈரானிய அல்லது வேறு எந்த அரசாங்கமும் சர்வதேச சட்டத்திற்கு மேலாக வைக்கப்படக்கூடாது.

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...