சுதந்திரத்தின் ரகசியம்
மக்களின் கல்வியில்-
கொடுங்கோன்மையின் ரகசியம்
அவர்தம் அறியாமையிலே..
சுதந்திரத்தின் ரகசியம் மக்கள் கல்வி கற்பதில் உள்ளது, கொடுங்கோன்மையின் ரகசியம் அவர்களை அறியாமையில் வைத்திருப்பது.-மேக்மில்லன்
அறிவுலகம் எந்நாளும் கல்வியைப் பற்றி புகழ்வதன் காரணம், அதன் நேர்மறையான சிந்தனை யாலே..
ஆனால் கொடுங்கோன்மை விழைவதொ மக்களின் அறியாமை, காரணம் அதன் எதிர்மறை சிந்தனையின் காரணமாகவே...
அறிவுலகின் ஆதாரம் கல்வியெனில், கொடுங்கோன்மையின் அடிப்படை அறியாமையாகும்.
அறிவுலகம் சார்ந்திருப்பது சுதந்திரத்தையெனில்,
கொடுங்கோன்மை சார்ந்திருப்பது மக்களின் அடிமைத்தனத்தை..
அதனால் தான் அறிவுடைமையின் அவை கற்றோரால் நிறைந்திருக்கிறது.
கொடுங்கோன்மையின் அவையோ அறிவிலிகளாலும், தற்குறிகளாலும் நிறைந்திருக்கிறது...

No comments:
Post a Comment