ஆயுதபானியிடம் மோத நேரிடின் ஆயுதத்தை நாடு-
அறிவற்றவனிடம் மோதநேரிடின் விலகி ஓடு.
நீங்கள் ஒரு வாள்வீரனைச் சந்திக்கும் போது, உங்கள் வாளை உருவிடுங்கள். கவிஞர் அல்லாத ஒருவருக்கு கவிதை வாசிக்காதீர்கள்.-லின்ஜி யிக்சுவான்.
வாழ்க்கையில் பலரோடு மோதநேருதல் இயற்கையே. பல சந்தர்ப்பங்களில் தவிர்க்க இயலாததும் கூட. . பண்டைய காலத்தில் ஒருவன் ஆயுதத்துடன் மோதினால் பதிலுக்கு ஆயுதம் ஏந்தி தற்காத்துக் கொள்ள போரிட்டுத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.
தற்காலம் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் ஆளாளுக்கு ஆயுதம் ஏந்திடவும் இயலாது. அதற்கு அவசியம் இல்லை . சட்டப்படியே சந்திக்கலாம்.
எல்லா காலங்களிலும் கருத்து மோதல் ஏற்படுகையில் கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க வேண்டும். அதுதான் அறிவுலக கோட்பாடு.
கவிதையை கவிதையாலும், கட்டுரையை கட்டுரையாகும், தர்க்கத்தை தர்க்கத்தாலும் அறிவுப்பூர்வமாக சந்திக்க வேண்டும்.
கவிஞர்கள் கவிதையால் மோதிடும்போது கவிதையால் பதிலடி கொடுப்பது தான் சரி.
எதிராளி கவிஞனாக இல்லாத போது கடைவிரிப்பது அவசியமற்றது. முட்டாள்தனமானது.
எதிராளி அறிவற்றவர் எனில் எந்த சாத்திரமும் பயன்தராது. அவ்விடத்தை விட்டு அகலுதலே உத்தமம். இதில் வெற்றி தோல்வி என்று பார்க்க வேண்டியதில்லை.
No comments:
Post a Comment