சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 16 October 2026

மலர்முகம்


சிரித்த முகத்தின் பின்னே

அழுத முகம் மறைந்திருக்கும்

இரண்டும் இல்லாதிருந்தால்

என்றோ மரித்திருப்பாளவள்...


பருவ மங்கை ஆனாலும்

மணமுடித்த பின்னரும் 

மரிக்கும் வரையிலும் 

அவள்வலி தனை ஏற்பவரிலர்


எவரெல்லாம் காரணமோ

அவர் முன்னே சிரித்து வைத்து

யாருமற்ற வேளையில் 

தானே அழுது தீர்க்கிறாள்.


பரிதாபம் கொண்டு

பாவம் இவளென்று கூறிட

பாழும் இவ் வுலகில் 

பண்பாளர் இல்லாது போனாரே... 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...