காண்பது அறிந்தது உண்மையாயினும் முட்டாள்
தொடர்வதென்னவோ பொய்களையே...
உலகில் உள்ள எந்த ஜீவராசிகளிலும் மனித இனம் மட்டுமே மிக உயர்ந்த என கருதப்படுகிறது. காரணம் அது மட்டுமே சிந்தித்து பொருளின் தன்மை, காரண, காரியங்கள் ஆகியவற்றை பகுத்தறிந்து முடிவெடுக்கப( ?!) கூடிய திறன் படைத்தது.
பல விடயங்களில் கண்ணாரக் கண்டும் அதனுடைய உண்மை தன்மை என்னவென்று தெரிந்தும் பொய்யை நம்புகிற போக்கு மனிதனிடம் மட்டுமே இருப்பது மிகவும் விந்தையானது. அதிலும் படித்தவர்கள் பதவிகளில் இருப்பவர்கள் கூட எது உண்மை என்பதை பார்த்து அறிந்தும் கூட பொய்யை நம்பி பின்னால் செல்கிறது வேடிக்கையானது, வித்தையானது.
அதற்கு காரணம் சொல்வதும், நியாயப்படுத்துவதும் இன்னும் கொடுமையானது.
*************

No comments:
Post a Comment