அதிகாரத்துக்கு கண்மூடித்தனமாய் கீழ்ப்படிதலென்றுமே
உண்மைக்கு பகையாம்.
அதிகாரத்திற்குச் செலுத்தும் கண்மூடித்தனமான கீழ்ப்படிதல் உண்மையின் மிகப்பெரிய எதிரியாகும்.-ஐன்ஸ்டீன்.
இன்றைய சமூகத்தில் குடும்பத்தில ஆரம்பித்து கல்வி நிறுவனங்கள் அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் என எல்லா இடங்களிலும் ஒரே அதிகார மயம் தான். எங்கும் சனநாயகப்பூர்வமான செயல்பாடுகளே கிடையாது என்ற நிலை தான்.
அதிலும் கண்மூடித்தனமாகப் பணிதலையே அதிகாரம் செலுத்துவர் விரும்புவர். அதிலும் அரசியல் கட்சி என்றால் சொல்லவே வேண்டாம் கண்மூடித்தனமான பணிதலும் காலில் விழுதலுமே அதன் கலாச்சாரமாய் மாறிப்போனது.
கண்மூடித்தனமாய் பணியும்போது உண்மைகள் ஒருபோதும் வெளிப்படுவது இல்லை.
அச்சத்தின் விளைவாகவோ அல்லது சுயலாபத்திற்காகவோ அடிபணிவோர் நேர்மையாக உண்மையை சொல்லப்போவதில்லை. அதனால் ஆள்பவர்களுக்கும் பயனில்லை. சமூகத்திற்கும் பயனில்லை.

No comments:
Post a Comment