சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 5 October 2026

எழுதுங்கள் ஏராளமாய்...

 

புதைந்துபோனது

நீதியின் குரல்

வார்த்தை

ஜாலங்களாலே.. 

வன்முறை

ஆயுதத்தாலே...


கட்டாரிகளால்

கருத்துக்களை

நசுக்க முடியுமென்றால்

காட்டுமிராண்டிகளால்

உலகே

நிறைந்திருக்கும்...


உண்மையை

உரைத்திட்ட ஞானி களால், 

ஊருக்கு

உழைத்திட்டஉத்தமர்களால், 

உலகமின்னும்

உயிர்ப்புடனுள்ளது....


எழுதுங்கள்

ஏராளமாய்... 

உண்மையை

உரக்க உரையுங்கள்..

உலகம்

உய்ந்திடுமட்டும்

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...