சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 7 October 2026

கவி துக்கடா

 


புண்ணியம் தேடிடவில்லை

அன்னதானமென அழைத்திடவில்லை 

மன்னுயிர் தன்னை

தன்னுயிரென எண்ணிடும்

இவனுக்கு ஈடு இணை ஈங்கில்லை


வலியின்றி வெற்றி யில்லை-வலியின் கதையே

வழியாம் வெற்றிக்கே.. 

 


உங்கள் குடும்பம், 

உங்கள் உடலமைப்பு 

உங்கள் பங்குதாரர், 

உங்கள் கனவுகள், 

உங்கள் அதிர்ச்சி, 

உங்கள் வேலை, 

உங்கள் பாதுகாப்பின்மை 

நீங்கள் ஆடை அணியும் விதம் 

என வரும் 

நகைச்சுவைகளை 

ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். 

அவமரியாதை 

எல்லா நகைச்சுவைகளின் 

வடிவத்திலும் வருகிறது



 அடைந்திட்ட வெற்றி 

அத்தனையிலும்

அடங்கியுள்ளதே 

அன்பு பெற்றோரின்

அயராத உழைப்பும்

அவர்தம் தியாகமும்... 

அறிந்திடாயோ?! 

 


உயிர் பிழைக்க உழைத்திடுவோர்

உழைப்பாளர்-சுமந்திடுவர்

உலகின் பெருஞ்சுமையை.. 


தாமுயர உழைப்பார் நடுத்தர

வர்க்கமெனினும்

வரி கட்டி காத்திடுவர் உலகினையே... 


விரல் விட்டு எண்ணிட்ட

செல்வந்தர் சுவைத்திடுவர் உலகின் 

செல்வந்தனை.. 


அவர்தம் சேவகம்புரிய

ஆட்டிப்படைத்திடுவர்-அதிகாரத்தாலே

அரசியல் வாதி தாமே...  



இருக்கையில்  அவர் இருப்பு மறந்து

எங்கெங்கோ சிந்தை செலுத்தி, 

இல்லாத போழ்து கண்ணீர்

இறைக்கிறாரே..

சமூக ஊடகந்தனை இவர் வசமென எண்ணி

அதன் வசத்திலன்றோ வா(வீ) )ழ்கின்றாரே. 



 ஊடகந்தனில் காண்பதெல்லாம் 

உண்மையென நம்பிடாதீர்-

கண்டதெல்லாம் உண்மையன்று

கானாத பகுதியுமுண்டு.. 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...