சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 13 October 2026

நிரந்தரம்


நீருள்ளமட்டும் 

நிலமுள்ளமட்டும் 

காருள்ளமட்டும் 

கடலுள்ளமட்டும்

'நிரந்தரமானவன் நான்; ஆட்டிப்படைப்பேன் 

அத்தனைபேரையும்' எனச்

சொல்லி முடித்தவர்கள் மடிந்துபோனார்கள்,

கரைந்திடும் 

காலக்கணக்கின் முன்னே - வெறும்

கணநேரக் கணக்காய்!


நிரந்தரமானதென்று 

ஏதும்

நிரந்தரமாய் இல்லாத

பொழுது,

காலத்தைக்

கட்டிப்போட எவராலும்

கண்டறிய முடியவில்லையே!

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...