திருட பெரிதாய் ஏதுமில்லா
சின்ன ஓட்டு வீடு
உதிர்ந்து போன காரைச்சுவர்
ஒட்டுத் திண்ணை
நான் வாசக்கதவு
மௌனமாய் பார்த்து நின்றேன்
கறுப்பு வெள்ளையாய்
பாடல்காட்சி
காச்சுமூச்சென
கதறிக்கொண்டிருந்தது.
டயர் வண்டி
ஓட்டிவந்த
சின்னப்பையன்
ஆர்வமாய்
வாய்பிளந்து
ரசித்து பார்த்தான்.
உள்ளேயிருந்த
மகராசி
சாதீயதிமிரோடு
சடாரென்று சாத்தினாள்.
சிதறிப்போனது
ஏதுமறியா
சிறுவனின்
சிறு ஆசை
கூடவே மனிதம்..
செயலற்று
சும்மாயிருந்தேன்.
***********'****'
சீனி கார்த்திகேயன் புதுகை.

No comments:
Post a Comment