தலையில் வீடு,
தோளில் உலகம்,
முதுகில் சுமை...
சிந்தையில் என்றுமே
குடும்பத்தின் சுமை!....
ஆயிரம் கைகள்
போதாதே...
அவள் துயர் தாங்கிட!
சலவை இயந்திரமும்,
விளக்குமாறும்,
கடிகாரமும், கூடையும்
என...
அவள் சுமப்பது
வெறும் பொருட்களை அல்ல,
ஒரு குடும்பத்தின்
ஒட்டுமொத்த
வாழ்க்கைச் சுமையினை!
வளைந்த முதுகினிலும்
குழந்தையை வருடும்
அந்த ஒற்றைக் கரமே...
தாய்மையின் பேரிலக்கணம்!

ஆக்கிச் சமைத்துக்
ReplyDeleteகூட்டிப் பெருக்கி
அழுக்கைப் போக்கத்
துணிகள் துவைத்து
வீட்டைக் கழுவி
வெளியே சென்று
வேண்டுவ வாங்கித்
தூக்கிச் சுமந்து
தூக்கம் துறந்து
குழந்தைகளைக்
காக்கும் கடமையும்
சுமப்பவள் தாயே!