சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 16 May 2026

போரா அல்லது கவனச்சிதறலா?!

போரா அல்லது கவனச்சிதறலா?War or distraction?

கவனச்சிதறல் என்பது மக்களின் கவனத்தை விரும்பிய கவனப் பகுதியிலிருந்து திசைதிருப்பி , அதன் மூலம் விரும்பிய தகவலைப் பெறுவதைத் தடுக்கும் அல்லது குறைக்கும் அல்லது குறிப்பிட்டு விஷயத்தை கவனிக்காமல் இருக்கும் பொருட்டு திசை திருப்பும் ஒரு செயல்முறையாகும்

உள்நாட்டு அமைதியின்மை திடீரென வெளிநாட்டு மோதலாக மாறினால்,எது மாறுகிறது — எது அமைதியாக மாறாமல் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கலாம். 

உதாரணமாக பல்வேறு நாடுகளில் , நடைபெற்ற ,நடைபெறும் போர்களுக்கு  முந்தைய சூழ்நிலை மக்களின் கவனத்தில் இருந்து எவ்வாறெல்லாம் திசை திருப்பப்பட்டிருக்கிறது என்று நன்கு அவதானித்து பார்த்தால் நமக்கு தெளிவாக புரியும். 

 அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "எப்ஸ்டீன்" சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி, மக்களின் அவநம்பிக்கையும், சட்டபூர்வமான எதிர் நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் போது உலக மகா சமாதான காவலராக ஈரானின் அணு ஆயுத ஆபத்திலிருந்து உலகை காப்பதாக கூறி ஒரு போரை நிகழ்த்தியது...

இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திப்பதில் இருந்து தப்பிப்பதற்காக வும், தமது பெரும்பான்மை இல்லாத அரசை தக்கவைத்து அதிகாரத்தை கை கொள்வதற்காகவும் இஸ்ரேலை பாதுகாக்க, பாலஸ்தீனத்துக்கு எதிராக காசா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டு உருவாக்கி இருக்கக்கூடிய பதற்றமான போர் சூழ்நிலை.... 

உக்ரேனிய ஜனாதிபதி உள்நாட்டு பிரச்சனைகள் இருந்து தப்பிப்பதற்காக வும், ரஷ்ய மொழி பேசக்கூடிய மக்களுக்கு எதிராக தன் நாட்டில் தான் உருவாக்கிய சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கு, ஊழல் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வலியக்க தனது நாட்டை நேட்டோவில் சேர்க்க முயற்சி செய்து ரஷ்யாவுக்கு எதிரான பதற்றத்தை உருவாக்கியது.... 

பல நாடுகளில் தேர்தல்கள் வரும்போது பக்கத்து நாட்டுடன் போர் அபாயம் உருவாவதும், தேசபக்தியை வைத்து ஆளும் கட்சி வாக்கு சேகரிப்பதும் நடக்கக் கூடியதே... 

என ஏராளமாய் உதாரணங்களை காணலாம்... 

இம்மாதிரியான சூழல்களை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டில் இருக்கக்கூடிய போற அபாயத்தை காட்டி அல்லது போரை உருவாக்கி, அப்போரினால் பிளவுபட்ட மக்களை ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைக்க முடியும்.

பயம், கோபம் மற்றும் கவனத்தை ஒன்றாக வெளிப்புறமாகத் திசைதிருப்புதல்.வெளிப்புற மோதல்களின் போது தேசிய அடையாளம் வலுப்பெறுகிறது.

அரசுக்குள்ளேயே தற்காலிக ஒற்றுமையை உருவாக்கி, தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால், மோதல் பொதுமக்களின் கவனத்தை வியத்தகு முறையில் திசை திருப்பவும் கூடும்.

உயிர் பிழைத்தலும் தேசபக்தியும் பொதுமக்களின் உணர்வில் மேலோங்கியுள்ள நிலையில் அகப் பதற்றங்களும், ஏற்றத்தாழ்வுகளும் மக்களின் கவனத்திலிருந்து மங்கிவிடுகின்றன.

அந்த இடத்தில்தான் பதற்றம் தவிர்க்க முடியாததாகிறது.

போர் எப்போதுமே தற்காப்புக்காகவும் அவசியத்திற்காகவும் மட்டுமே நடத்தப்படுகிறதா?அல்லது அது உள்நாட்டு அரசியல் அழுத்தங்களையும் மாற்றியமைக்க பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இருந்தாலும் அதை சொல்பவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள்.

பெரிய மோதல்கள் சமூக முன்னுரிமைகளை விரைவாக மாற்றி அமைப்பதால்,பயமும் அவசரமும் மக்கள் பொறுத்துக்கொள்ளும் விஷயங்களை மாற்றிவிடக்கூடும்.

மேலும், அவர்கள் என்றுமே அரசுக்கெதிராக கேள்விகளைக் கேட்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுகிறார்கள்.


அதன் உள்ளர்த்தம் இது தான்.. நெருக்கடியான தருணங்களில் போரினால் சமூகங்களை ஒன்றிணைக்க இயலும்.ஆனால் அது, அதிகாரமும் கவனமும் செயல்படும் விதத்தையும் மாற்றுகிறது.

சிந்தனையாளர்களுக்கான கேள்வி இதுதான் 

வெளிப்புற மோதல் அக விரக்தியைத் திறம்படத் திசைதிருப்பினால்,தேவையையும் அரசியல் ஆதாயத்தையும் எப்படிப் பிரித்தறிவது?

மில்லியன் டாலர் கேள்வி!!! 

1 comment:

  1. பிற நாட்டில் இருக்கும் உள்நாட்டு பிரச்சனைகளை அந்நாட்டு அதிபர்கள் எப்படி மறக்கும் வண்ணம் மக்களை திசை திருப்பி அண்டை நாட்டுமக்களை அழிக்கும் அறிவு ஆபத்தானது. கோவை செல்வராஜ்

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...