ஒரு வழியாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் சத்தம் இல்லாமல் நிகழ்ந்திருக்கிறது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் சரித்திர பூர்வமாக மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது 1952 இல் இருந்து கோலோச்சிய காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிவிட்டு, 1967இல் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தது. திராவிட இயக்கம் இரண்டாக பிளவு பட்டாலும் மாறி மாறி அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கின்றன. திராவிட இயக்கங்களின் ஆட்சியை மாற்றுவதற்கு பலமுறை முயற்சிகள் நடந்தாலும், தோல்வியில் முடிந்தன. அம்முயற்சி இம்முறை சத்தமில்லாமல் வெற்றி அடைந்திருக்கிறது. இது எந்தவிதமான பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது என்ற உணர்வே இல்லாத அளவில் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் கொள்கை சமூக நீதி, மத நல்லிணக்கம், தாய் மொழி காத்திடுதல், இந்தி திணிப்பை தடுத்து நிறுத்தல் போன்ற பெரியார் அண்ணா போன்றோரின் லட்சியங்களின் அடிப்படை தான்.
இந்தியாவிலேயே ஓரளவுக்கு ஹிந்தி திணிப்பை தடுத்து நிறுத்தி. மதநல்லிணக்கத்தை பேணி பாதுகாத்து சமூக நீதியை காத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.
இது வடநாட்டு ஆதிக்க சக்திகளுக்கு சனாதன சக்திகளுக்கு பிற்போக்கு சக்திகளுக்கு கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இதை உடைப்பதற்கு அவர்கள் செய்த பல்வேறு சாகசங்கள், முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்தன ஆனால் இம்முறை மிக எளிதாக வெற்றி அடைந்திருக்கிறது.
அதற்கு திராவிட இயக்கங்கள் மக்களை விட்டு விலகிச் சென்றதும், அணிகளுக்கு சித்தாந்த ரீதியாக பயிற்சி அளித்தல், அரசியல் படுத்துதல், பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான சமரசம் அற்ற போராட்டம் நடத்துதல் போன்றவற்றில் ஏற்பட்ட தொய்வு, பலவீனம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், கூட்டணி கட்சிகளிடம் காட்டிய அலட்சிய போக்கு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பின்னர் விரிவாக ஆய்வு செய்திடுதல் வேண்டும். எனினும் தமிழகம் இனி மிகப்பெரும் கடும் சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்....
No comments:
Post a Comment