பொதுவாகவே உணவில் சுவையூட்டிகள், மணமூட்டிகள், நிறமூட்டிகள், என்றெல்லாம் கலக்கப்படும். உணவின் தன்மை எதுவுமே மாறாமல் கவர்வதற்காக பல வண்ணங்களில் நிறமூட்டிகள் கலக்கப்படுவதை பெரும்பாலும் தின்பண்டம் பார்க்கிறோம். அதேபோல சில உணவுகள் ருசிக்க வைப்பதற்காக மணமூட்டிகள் கலக்கப்படுகின்றன
அதே போல சில சுவையூட்டிகள் உணவில் கலக்கப்படுகின்றன. அந்த உணவின் ருசியை கூட்டி, மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும் அளவிற்கு அந்த சுவையூட்டிகள் வேலை செய்யும். உதாரணமாக அஜினோமோட்டோவை சொல்லலாம். அது இல்லை என்றாலும் அந்த உணவு சுவையாக தான் இருக்கும். ஆனாலும் அந்த சுவையூட்டி ஒரு வித்தியாசமான உணர்வினை மனங்களிலே பதிந்து விடுகின்றன .
மனிதர்களிடமும் இதுபோன்று வேலை செய்யும் சில மக்கள் நன்கு ரசிக்கத் தக்க வகையிலே பேசி மனதைக் கவர்ந்தவர்கள் நகைச்சுவையாகப் பேசுபவர்கள் உணர்வைத் தூண்டும் வகையிலே பேசக்கூடியவர்கள் ஆனால் சிலர் மிக உருக்கமாகப் பேசி அல்லது அன்பாகப் பேசி சிலரிடமோ பலரிடமோ மன பேதத்தை உண்டாக்கி கலகத்தை மூடிவிட்டு சென்று விடுவார்கள். இவர்களை கலகமூட்டிகள் என்று சொல்லலாம். மனிதர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது இப்பேற்பட்ட கலகமூட்டிகளிடம் தான்.
இதே போல அரசியலிலும் சில ஆசாமிகள் இருக்கிறார்கள். மனதிற்குள் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு பிறரிடம் அவரவர் கொள்கைக்கு தகுந்த மாதிரி பேசி, கருத்து சாயம் பூசிக்கொண்டு குழி தோண்டுபவர்கள், எங்கு சென்றாலும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, குழு பேதத்தை உருவாக்கி கலகமூட்டி அந்த அமைப்பையோ, அந்த அரசியலையோ நாசம் செய்து விட்டுப் போகிறவர்கள்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் போய் சேர்ந்து கொண்டு சுகம் தேடும் ஆசாமிகள் உண்டு. எதிர்கட்சியாக தேடிப்போய் சேர்ந்து அந்த கட்சியை நாசம் செய்து விட்டு ஆளுங்கட்சியிடம் லாபம் பார்க்கும் ஆசாமிகளும் உண்டு.
எனக்கு தெரிந்த ஒருவர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனே அங்கு சென்று விடுவார். அவர் கீழே உள்ள அவரது பணியாளர் "ஐயா அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே" என்று கேட்டார்..
அவர் சொன்னார் "நான் எங்கடா கட்சி மாறினேன். ஜனங்கள் தான் மாத்தி மாத்தி ஓட்டு போட்டு ஆட்களை மாத்துறாங்க. நான் எப்பவுமே ஒரே கட்சி தான். ஆளுங்கட்சி" என்றார்
. ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது இது போன்ற பச்சோந்திகளிடமும் கலகமூட்டிகளிடமும் தான்.
No comments:
Post a Comment