சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 22 May 2026

மரணம்

 மரணம் 

எல்லா வலிகளிலிருந்தும் 

விடுதலை பெறும் வழி... 

நாமாக தேடும் வழி அல்ல, 

தானாக போகும் வழி... 


வந்தது நிஜம் போலவே 

போவதும் நிஜம்.... 

இருப்பது நிஜம் போலவே 

இறப்பதும் நிஜம்... 

இருந்தும் இல்லாது போகும்

 நிழலான நிஜம்...


வாழ்கின்ற காலத்திலே 

வாராதென்று ஏமாந்து, 

வருகின்ற போது 

பதறி அழ வைக்கும் நிஜம்..


போனவருக்கு துயரமில்லை 

துக்கமும் கவலையுமில்லை 

வாழ்பவரை கதற வைக்கும் நிஜம்.


காலத்தால் கதறியழுதவரும் 

கண்ணீர் துடைத்து

கவலை மறந்து

சிரிக்க போகும் நிஜம்.... 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...