சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 21 May 2026

நீங்க யாரு பக்கம்?

 நீங்க யாரு பக்கம்?

***'***** ***********

அவன் சரியில்லை.                      இவன் சரியில்லை.                      எனக்கு வாய்ப்பு தாருங்கள்! ....


யாரப்பா நீங்கள்.                          முதல்ல சொல்லுங்க?


அவன் தீய சக்தி.                            இவன் ஊழல் சக்தி.                நாங்கள் தூய சக்தி! ....


அது சரிப்பா எதப்பா.                      உன் கொள்கை?!


அவன் எதுவும் செய்யலை.         இவன் எதுவும் செய்யலை.     நாங்கள் தான் செய்வோம்! ..


சொல்லுங்கப்பா.                    என்னதான் செய்வீர்கள்? 

சொல்ல மாட்டோம்.                        செய்து காட்டுவோம்.                வாய்ப்பு மட்டும் தாங்க! ...


சரிப்பா வாய்ப்பு தந்தாச்சு.           என்ன தான் நடக்குது?!


அவன்தான் காரணம்.                  இவன் தான் காரணம்... ...


நிறுத்துங்கப்பா முதல்ல.                நீங்க யாரு பக்கம்?!              அம்பானிஅதானி பக்கமா.      அன்றாடம்காய்ச்சி பக்கமா?இப்பவாவது சொல்லித்தொலைங்க?! 


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...