நாடு என்பது வெறும் காடு
நிலம் ஆறு மட்டுமல்ல..
காடு என்பதும் வெறுமனே
நிலம் மட்டுமே அல்ல.
அது ஒருவரின் வீடு.
ஒருவரின் உணவு.
ஒருவரின் புகலிடம்.
ஒருவரின் முழு உலகம்.
ஆனால் மனிதர்கள்
மரங்களைப் பார்க்கையில் ,
மரக்கட்டைகளாக பணமாக
பொருளாக பார்க்கிறார்கள்...
விலங்குகள் மரங்களைப்
பார்க்கும் போது, தங்கள்
உயிராக ப் பார்க்கின்றன...
நாம் காட்டை வளர்ச்சி என்கிறோம்.
அவர்கள் வருமானம் என்கிறார்கள்.
மேலும் மிகவும் வருத்தமான
விஷயம் என்னவென்றால்...
அவர்கள் முதலில்
வீடுகளை அழிக்கவில்லை.
காடுகளை அழித்தார்கள்.
பின்னர் வீடுகளை
நாட்டின் செல்வங்களை
அனைத்து வாழ்வாதாரங்களை
அழிக்கிறார்கள்
காலம் இன்னும்
கடந்திடவில்லை
முற்றாக அழிந்து போவதற்குள்
மனிதர்கள் மாற்றிடவேண்டும்
பூவுலகை காத்திட வேண்டும்...

No comments:
Post a Comment