சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 13 May 2026

பகுத்தறிவு மன்னிக்கப்படக்கூடாத குற்றமா என்ன?!


கடவுள் எல்லா குற்றங்களையும் மன்னித்துவிடுகிறார், அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத்தவிர.... வால்டேர் 

***********

நம்பிக்கையா அல்லது சந்தேகமா?என்ற கேள்விக்கு நம்பிக்கை என்றால், அதுவும் கேள்வி கேட்பாரற்ற நம்பிக்கை என்றால் மன்னிக்கப்படுவீர்கள், கடவுளால் இல்லாவிட்டாலும், சக மனிதர்களால். 

ஒருவேளை எதிர்மறையாக சந்தேகத்தை எழுப்பிடும்பட்சத்தில், கடவுளால் அல்ல, மனிதர்களால் மன்னிக்கப்படாதது மட்டுமல்ல தண்டிக்கப்படுவீர்கள். 

ஏனெனில் இது வரை கடவுள் அவமதிக்கப்பட்டதற்காகவோ, அல்லது கடவுள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டதற்காகவோ, தண்டிக்கப்பட்டவர்களே, கொல்லப்பட்டவர்களே பூவுலகில் அதிகம்.

 கேள்வி கேட்காமல் நம்பியதற்காக பகுத்தறிவாளர்களால்.. தண்டிக்கப்பட்டவர்கள் யாருமில்லை... 

---

"கடவுள் வன்முறை, பேராசை, பாசாங்குத்தனம், மேலும் அவர் பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு கொடுமையையும் மன்னிக்கிறார்.

ஆனால் ஒருவன் அமைதியாகக் கேட்கும் தருணத்தில்,

பரலோகத்தில் உள்ள சிம்மாசனம் காலியாக இருக்கிறதா என்று,எழுப்பப்படும்   சந்தேகம் மன்னிக்க முடியாத பாவமாகிவிடுகிறது."

---

முழுமையான உறுதியின் மீது கட்டப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும், கலகத்தை விட அதிகமாக ஒரு விஷயத்திற்கு அஞ்சுகிறது:

உரக்கக் கேட்கப்படும் ஒரு நேர்மையான கேள்வி யாருக்கும் பதிலளிக்க உங்களுக்கு.. 

ஏன், சந்தேகம் அறைக்குள் நுழைந்தவுடன்,  அதிகாரம் சாதாரண கீழ்ப்படிதலைக் கோருவதற்குப் பதிலாக,

தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.

---

வரலாற்றிலேயே பகுத்தறிவு சிந்தனை, ஒருபோதும் வெறுப்பாக இருந்ததில்லை.

அது எப்போதும் ஆர்வமாகவே உள்ளது.

ஆனால் ஏன் என்று கேட்க விரும்பாத, மாற்றங்களை விரும்பாத பழமைவாதிகளால், சனாதனவாதிகளால் சிந்தனை மறுக்கப்பட்ட, அழித்தொழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான பேரைத்தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது... 

மகாவீரர், புத்தன், ஏசு, சாக்ரடீஸ் என ஏகப்பட்ட ஞானிகளும், அவர்தம் கொள்கை களை பின்பற்றியதால் தண்டனை பெற்றோர், கழுமரம் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோர், நெருப்பில் இட்டு கொல்லப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டோரே அதிகம்... 


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...