சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 2 May 2026

சுவாமி சகஜானந்தா


சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருளைத் தருகிறது. மனு ஸ்மிருதி, பாகவத புராணம் போன்ற சமஸ்கிருத செவ்வியல் இலக்கியங்களில் இந்த
இந்த தத்துவமானது வர்ணாசிரமத்தை போதிக்கிறது அதாவது ஜாதி என்பது அழிக்க முடியாத, மாற்ற முடியாத பொருள் எனப்படுகிறது. அந்த சனாதன தர்மத்தின் மூலமாக திணிக்கப்பட்ட சாதி, அதில் உருவானது தீண்டாமை. அந்த தீண்டாமையை தகர்த்தெறியும் விதமாக, மக்களுடைய பிரச்சினைகளை எடுத்து போராடும் விதமாக செயல்பட்ட துறவி ஒருவர் தமிழகத்தில் இருந்திருக்கிறார். 


 "பறை அடிக்காதே,செத்த மாட்டை தூக்காதே திண்ணாதே,பார்ப்பானிடம் சாதிஇந்துவிடமும் பண்ணை வேலை பார்க்காதே" என்றவர் "இதற்கு மாறாக நான் உனக்கு கல்வியை தருகிறேன் சுயமரியாதையையும் பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்" என்றவர்.ஆன்மீகத்தை ஏற்று கட்டுப்பாடுடைய நாகரிகமான ஒழுக்கமான வாழ்வியலை கைகொள் என்றவர் தான் சகஜானந்தா எனும் துறவி. 

.தமிழக சட்டமன்றத்தில் 30 ஆண்டுக்களுக்கு மேல் எம்எல்சியாகவும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.

1890 ஜனவரி 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுக்காவில் உள்ள மேல்புதுப்பாக்கம் எனும் ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். திருநாளைப்போவார் (எ ) நந்தனார் பெயரில் மடமும் மற்றும் கல்விசாலையும் ஏற்படுத்தி பெரும் கல்விப்புரட்சி செய்த மகான். 

1917 இல் சிதம்பரம் ஓமக்குளத்தில் இவரின் நீர் எடுக்கும் போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக மதராஸ் மாகாணத்தில் அட்டவணை மக்கள் பொது பயன்பாடுகளிலும் அலுவலங்களிலும் உரிமை உண்டு என 1924 இல் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தீர்மானம் கொண்டுவந்தார்.


அவர் 1926 முதல் 1932 வரையிலும், மீண்டும் 1936 முதல் 1947 வரையிலும் தமிழ்நாடு சட்டசபையின் உறுப்பினராக இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் சிதம்பரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1959 இல் அவர் இறக்கும் வரை உறுப்பினராகத்  தொடர்ந்து 34 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உரிமைக்குரல் கொடுத்த மாமனிதர். 

சுவாமி சகஜாநந்தரின் 67 வது நினைவுதினம் மே 1 ஆகும். 



No comments:

Post a Comment

சுவாமி சகஜானந்தா

சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருள...