சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 24 May 2026

கெஞ்சி பெறுவதில்லை சுதந்திரம்!

 உலகில் எவரும், வரலாற்றில் எவரும், தங்களை ஒடுக்கிய மக்களின் தார்மீக உணர்வுகளுக்கு முறையிட்டுத் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றதில்லை.

—அஸ்ஸாட்டா ஷகூர்

சுதந்திரம் என்பதை பிச்சை எடுத்துப் பெறுவது அல்ல, அது உரிமை. அது போராடி பெறுவது, போராடி பெற்ற சுதந்திரத்தை தக்க வைப்பதற்கும் போராட வேண்டி இருக்கும் என்பதற்கான ஒரு சிறு வரலாற்று குறிப்பு இது .... 


காலனித்துவ அடிமைப்பட்டிருந்த ஹைட்டி என்ற சின்னஞ்சிறு நாடு பிரான்சிடமிருந்து போராடி சுதந்திரம் பெற்ற பிறகு, இழந்த அடிமைகள் மற்றும் நிலத்திற்காக பிரான்ஸ் 150 மில்லியன் பிராங்குகளைக் கேட்டது உங்களுக்குத் தெரியுமா?

 அடிமைத்தனம் மூலம் ஹைட்டியர்களுக்குப் பயிற்சி அளித்ததாக அவர்கள் கூறி இந்தப் பணத்தைக் கேட்டார்கள். தங்கள் அடிமைகளையும் நிலத்தையும் இழந்த முன்னாள் எஜமானர்களுக்கு  இழப்பீடு வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது "நல்லெண்ணத்தால்" அந்தக் கடனை 30 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய 90 மில்லியன் பிராங்குகளாகக் குறைத்தது. 


ஹெய்தி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும்.

 இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். 


ஹெய்தி பெரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும்இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.வரலாற்றில் ஒரே இரவில் திட்டமிடப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ஒரே அடிமைப் புரட்சி ஹைட்டி (ஹைத்தியன் புரட்சி) விடுதலைப் போர் ஆகும்.
பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு, அக்காலத்தில் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்திக்காக உலகளவில் மிகவும் இலாபகரமான காலனியாக விளங்கியது. தோட்டங்களில் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்ட அடிமைகள், ரகசியமாக ஒன்றுகூடி 1791-இல் மாபெரும் புரட்சியைத் தொடங்கினர்புரட்சியின் முக்கிய தலைவரான டூஸைன் லூவர்துர் (Toussaint Louverture), அடிமை முறையை ஒழித்து, ஹைட்டியின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பின்னர் அவர் பிரெஞ்சு படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டூஸைனுக்குப் பிறகு தலைவரான ஜீன்-ஜாக் டெஸாலின் (Jean-Jacques Dessalines), பிரெஞ்சுப் படைகளை இறுதிப் போரில் தோற்கடித்தார்..ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.

1890களில் அமெரிக்கா ஹைட்டியில் கூடுதல் இராணுவ மற்றும் வர்த்தக சலுகைகளைப் பெற முயன்றது. 1905-ல் அது ஹைட்டியின் சுங்க நடவடிக்கைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது, மேலும், முதலாம் உலகப் போருக்கு முன்னர், அமெரிக்க வணிக நலன்கள் அந்நாட்டில் ஒரு உறுதியான நிதி அடித்தளத்தையும் மதிப்புமிக்க சலுகைகளையும் பெற்றன.

ஹைட்டி தன்னை ஒடுக்கியவனுக்குப் பணம் செலுத்த மறுத்ததால், அமெரிக்கா பிரான்சின் "குண்டர்களாக" மாறி, 1915-ல் ஹைட்டி மீது படையெடுத்து, இந்தக் கடனைச் செயல்படுத்தியது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஹைட்டி பிரெஞ்சு வங்கிகளிடமிருந்து பெரும் கடன்களைப் பெற வேண்டியிருந்தது. அந்தக் கடன்கள் பல தலைமுறைகளாக ஹைட்டியின் பொருளாதாரத்தைச் சிதைத்தன.

சுதந்திரம் பெறுவதற்கு எவ்வளவு போராடுகிறோமோ அதைப்போல அதை தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும் அந்தப் போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தக்க வைக்கவில்லை என்றால் நடத்திய போராட்டங்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் இதுதான் வரலாறு சொல்லித் தரும் பாடம்.. 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...