தேசம் என்பதை நான் ஏற்கவில்லை. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?இந்திய தேசிய கீதம் எழுதிய ரவீந்திரநாத் தாகூர் தான்.
அதைவிட முக்கியமானது இந்தியா-வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.
தேசியம் குறித்து அவர் மூன்று நூல்கள் எழுதியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் தேசியம் ஜப்பானில் தேசியம், இந்தியாவில் தேசியம்.
இந்த மூன்று நூல்களின் மையக்கருவாக அவர் முன்வைப்பது எது தெரியுமா?
நான் இந்த தேசம் அல்லது அந்த தேசத்திற்கு எதிரானவன் என்று கூறவில்லை.தேசம் எனும் கோட்பாட்டிற்கே எதிரானவன் என்று முழங்கினார்.
ஏன்? தீவிரமான சுயதம்பட்டம் அடிக்கிற தேச வழிபாடு மனித குலத்தை விலக்கல்ல..
சமூகத்திற்கும் தேசத்திற்குமான வேறுபாட்டையும் அவர் விளக்குகிறார்.
"சமூகத்திற்கு எந்த உள் நோக்கமும் இல்லை. சமூகத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளுக்கு இயற்கையாகவே இருக்கும். மனிதன் தனது கருத்துக்களை சுயமாக,சுதந்திரமாக வெளிப்படுத்துகிறான்.
ஆனால் உள் நோக்கத்துடன் இயந்திரகதியாக உருவாக்கப்படும் ஒரு அமைப்புதான் தேசம்.
தேசத்தின் அடித்தளம் என்ன?
அதிகாரவெறி, பேராசை, சந்தேகம், பொறாமை,ஆகியவையே தேசத்தின் அடித்தளம் என்பது அவர் கருத்து.
தேசிய கீதத்தின் பொருளாக உரைக்கும் அவரது அடிநாதமான கருத்து அது தான்.
*ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே.
*பாரத பாக்ய விதாதா
இந்தியத் திருநாட்டிற்குப் பெருமையும், மங்கலமும், செல்வமும் நீயே.
*பஞ்சாப்,சிந்து, குஜராத, மராட்டா,திராவிட, உத்கல பங்கா
பஞ்சாப் மாகாணம்,சிந்துநதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மாராட்டிய மாநிலம், திராவிடப்பகுதி,உத்கலமாகிய ஒரிஸ்ஸா,வங்காள தேசம் உன்னுடையது.
*விந்திய ஹிமாசல யமுனா கங்கா
விந்தியமலை,இமயமலை,கங்கை,யமுனை ஆகியவை உன்னுடையது.
*உத்சல ஜலதி தரங்கா
மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் தங்களின் அலைகளால் உன்னைப் பாடிக் கொண்டிருக்கின்றன.
*தவ சுப நாமே ஜாஹே
உனது மங்களகரமான நாமத்தை எப்போதும் நாங்கள் போற்றுவோம்.
*தவ சுப ஆஷிஷ மாஹே
உனது மங்களகரமான ஆசைகளை வேண்டி நிற்கிறோம்.
*காஹே தவ ஜய காதா
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே பாடிக் கொண்டிருக்கிறோம்.
*ஜன கண மங்கல தாயக ஜய ஹே
மக்களின் மங்களங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே.
*பாரத பாக்ய விதாதா
இந்திய நாட்டின் பாக்கியங்களை தருபவள் நீ.
*ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே.
வெற்றி உனக்கே.வெற்றி உனக்கே.வெற்றி உனக்கே.
வெற்றி. வெற்றி.. வெற்றி... வெற்றி... உனக்கே.
இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, பௌத்தர் என்றோ, சரஸ்வதி என்றோ, ஆரியர் என்றோ எந்த இடத்திலும் இல்லை.நமக்கான நாடு.
எனவே இந்தப் பாட்டு தான் பொருத்தமானது.
தாகூர், 'பாரத பாக்ய பிதாதா' பாடலை 'இந்தியாவின் காலைப் பாடல்' என்று அழைத்தார், ஏனெனில் அது சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை அறிவித்ததாக அவர் உணர்ந்தார்.
இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன", ரவீந்திரநாத் தாகூரால் 1911 டிசம்பர் 11-ல் வங்காள மொழியில் இயற்றப்பட்டது. இது முதன்முதலில் 1911 டிசம்பர் 27-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டு, பின்னர் 24 ஜனவரி 1950-ல் இந்திய அரசியலமைப்பு சபையால் அதிகாரப்பூர்வ மொழியில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.தேசிய கீதத்தின் வரலாற்று முக்கியத்துவம். இது முதலில் "பரோதோ பாக்யோ பிதாடா" (Bharoto Bhagyo Bidhata) என்ற தலைப்பில், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பாடத்தின் 5 முதல் தலைப்பு. ஆகும்.
இந்தப் பாடல் இந்தியாவின் பன்முகத்தன்மை, ஒற்றுமை, மற்றும் புவியியல் சிறப்புகளை (பஞ்சாப், சிந்து, குஜராத், மராத்தா...) போற்றுகிறது.
வந்தே மாதரம் (தேசியப் பாடல்): சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கும் இந்தப் பாடல், தேசிய கீதத்திற்கான போட்டியில் நெருக்கமான போட்டியாளராக (நெருங்கிய போட்டியாளர்) இருந்தது.
"வந்தே மாதரம்" எனும் இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட இந்தியாவின் நாட்டுப் பாடலாகும்.1876லே எழுதப்பட்டு, 1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமடம் என்ற நூலில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. . சந்நியாசி கிளர்ச்சியின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சட்டோபாத்யாயின் ஆனந்தமடம் நாவல் பிரிட்டிஷ் சார்பு உணர்வுகளுக்காக அறியப்படுகிறது. இந்த நாவலில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்தியாவின் மீட்பர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சி இல்லாமல் இந்தியர்கள் ஆணவத்தை வெல்ல முடியாது என்றும் சாட்டர்ஜி வாதிடுகிறார்.
மௌலானா ஆசாத் , ஜவஹர்லால் நேரு , சுபாஷ் சந்திர போஸ் , ஆச்சார்ய தேவா மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் , காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பின்தொடர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் , 1937 இல் "வந்தே மாதரம்" பாடலின் சில பகுதிகளை தேசிய பாடலாகத் தேர்ந்தெடுத்தது . இந்துக்கள் அல்லாதவர்களின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு, இந்துத் தலைவர்களால் முழுப் பாடலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக வந்தே மாதரம் பாடலை "ஆட்சேபிக்கத்தக்கது" என்று கருதிப் பாட விரும்பாத எவரும், ஒரு தேசியக் கூட்டத்தில் மாற்று "ஆட்சேபிக்கத்தக்க பாடலை"ப் பாட சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் உட்பட கூடியிருந்த தலைவர்களின் கூற்றுப்படி, முதல் இரண்டு பத்திகள் தாய்நாட்டின் அழகை மறுக்கமுடியாத வகையில் வெளிப்படுத்தினாலும், பிந்தைய பத்திகளில் இந்து தெய்வமான துர்க்கையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன . வந்தே மாதரம் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க முடியாது என்று தாகூர் நம்பினார்.
பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் தாய் மண்ணை துர்க்கையுடன் ஒப்புவிப்பதாகக் கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
வந்தேமாதரம் எனும் வங்கமொழிப்பாடலின் தமிழ் மொழியாக்கம் இதோ..
"தாயே வணங்குகிறோம்
மகிழ்ச்சியான பொய்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிகீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா 'என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
கண்காணிப்பு தேவை
அம்மப நீ
மிகப் பெரிய
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
சுதந்திர ராமகல்
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்".
வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது. வந்தே மாதரப் பாடல், நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக கருதப்பட்டதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை..
"சாரே ஜஹான் சே அச்சா" (Sāre Jahāṉ se Acchā) என்பது கவிஞர் முஹம்மது இக்பால் எழுதிய மிகவும் பிரபலமான இந்திய தேசபக்தி பாடலாகும். 1904-ல் உருது மொழியில் எழுதப்பட்டது, "தரனா-இ-ஹிந்தி" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களிடையே தேசபக்தியைத் தூண்டிய ஒரு முக்கிய கீதமாகும்.
"முழு உலகையும் விட சிறந்தது எங்கள் இந்துஸ்தான் ,
நாங்கள் அதன் குயில்கள், அதுவே எங்கள் பூந்தோட்டம்.
நாம் அன்னியமான ஓர் இடத்தில் இருந்தாலும், இதயம் தாய்நாட்டிலேயே நிலைத்திருக்கும்;
நம் இதயம் இருக்க விரும்பும் அதே இடத்தில்தான் நாமும் இருப்பதாகக் கருதுங்கள்.
அந்த மிக உயரமான மலை, வானத்தின் நிழலைப் பகிர்ந்துகொள்பவள்,
அதுவே நமது காவலன், அதுவே நமது காவல்காரன்.
அதன் மடியில் ஆறுகள் துள்ளி விளையாட,
அவற்றின் உயிரோட்டம் நமது தோட்டத்தைச் சொர்க்கத்திற்கே பொறாமை ஊட்டுகிறது.
ஓங்காய் நதியின் ஓடும் நீரே ,
எங்கள் வணிகக் குழு முதன்முதலில் உன் கரையில் இறங்கிய அந்த நாள் உனக்கு நினைவிருக்கிறதா ?
நமக்குள் பகைமையைக் கொள்ள மதம் போதிப்பதில்லை.
நாம் இந்துக்கள் , நமது தாயகம் இந்தியா .
பண்டைய கிரேக்கம் , எகிப்து , ரோம் ஆகிய அனைத்தும் மறைந்துவிட்ட ஒரு உலகில்,
நமது சொந்த அடையாளங்களான பெயர் மற்றும் சின்னம் ஆகியவை இன்றும் நிலைத்திருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக உலகின் காலச் சுழற்சி நமது எதிரியாக இருந்தபோதிலும், நமது இருப்பு ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை .
இக்பால்! இந்த உலகில் எங்களுக்கு நம்பிக்கைக்குரியவர் எவரும் இல்லை.
எங்கள் மறைக்கப்பட்ட வலியை யார் அறிவார்?"
தற்போதைய பங்களாதேஷ் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஹிந்துஸ்தான் நிலத்தைப் போற்றும் இந்தப் பாடல் அமைந்துள்ளது. . மேலும் இந்திய ஒற்றுமைக்காக பாடிய முகமது இக்பால், பின்னர் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாளரானார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் இப்பாடல் போட்டிக்கு பொருத்தமற்றதாகி விட்டது.
********
உலகிலேயே இரண்டு நாடுகளுக்கு (இந்தியா - ஜன கண மன, வங்கதேசம் - அமர் சோனார் பங்களா) தேசிய கீதம் எழுதிய சிறப்பினைப் பெற்றவர் தாகூர்.
வங்கதேசத்தின் தேசிய கீதம் "அமர் சோனார் பங்களா" (என் தங்க வங்காளம்) ஆகும். இது வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் 1905-ல் எழுதப்பட்டது. 1971-ல் வங்கதேச விடுதலைப் போரின்போது இது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக மாறியது, மேலும் 1972-ல் அதிகாரப்பூர்வ தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இசை: ககன் ஹர்கராவின் "அமி கொத்தாய் பாபோ தாரே" என்ற பாடலின் மெட்டில் தழுவப்பட்டது.
வங்காளத்தின் இயற்கை எழில் மற்றும் கிராமிய வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் பொருளாக கொண்டு பாடப்பட்டுள்ளது.
*******'***
இன்று 10.05.2026 தமிழக முதல்வராக திரு விஜய் அவர்கள் பதவியேற்ற நிகழ்வின்போது வழக்கமான நடைமுறைப்படி முதலில் பாடப்பட வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடல் முதல் பாடலாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா அரசு பதவியேற்றபோது கூட வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலின் உண்மை பொருளை தெரிவித்து எங்களை தெளிவித்தமைக்கு நன்றி. கட்டுரைக்கு பாராட்டுகள் . கோவை செல்வராஜ்
ReplyDeleteஅரிய தகவல்கள் கார்த்திக் .. வாழ்த்துகள்..
ReplyDeleteதமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வந்தே மாதரமும் ..அடுத்து தேசியகீதமும் ..கடைசியாகதமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது ..இதில் தேசிய கீதம் இந்தியா முழுமைக்கும் பொதுவானது தமிழ் தாய் வாழ்த்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கானது .இசைக்கப்படாததற்கு காரணம் ஏதோ ஒன்றிய அரசிலிருந்து உத்தரவாம் என சொல்லப்படுகிறது .அப்படியானால் மேற்கு வங்க அமைச்சரவை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் பொழுது எந்த பாடலும் பாடவில்லை என்ற செய்தி வந்ததும் வேதனையாக இருக்கிறது ..
ReplyDeleteதமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த சோதனையா
தகவல் அருமை. பா ஜ.கா எவ்வளவு பின்னோக்கி செல்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
ReplyDelete