மதம் என்பது உலகத்திற்கு பொதுவானதாக இருந்தால், கடவுள் என்பவர் உலகத்திற்கு பொதுவானவராக இருந்தால், ஒருவரையோ , ஒரு இனத்தையோ, ஒரு நாட்டையே அடிமைப்படுத்துவதற்கு எவ்வாறு உதவுவார்?. அப்படி உதவினால் அவர் எப்படி உண்மையான கடவுளாக இருக்க முடியும்? . அந்த மதம் எப்படி அமைதிக்கான மதமாக இருந்திருக்க முடியும்? இந்த கேள்வி உங்களுக்கு வருகிறதா? உங்களுக்காக ஒரு வரலாற்ற தகவல்....
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (Leopold II) பெல்ஜியத்தை விட 76 மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்ட காங்கோ நாட்டை ஆக்கிரமித்து தன் சொந்தச் சொத்தாக மாற்றினார். ரப்பர் மற்றும் தந்தத்திற்காக காங்கோ மக்கள் கொடூரமாக அடிமைப்படுத்தப்பட்டனர்.காங்கோ நாட்டு மக்கள் அனைவரும் ரப்பர் சேகரிக்கும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இலக்கு (Target) எட்டப்படவில்லை என்றால், தொழிலாளர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், உறுப்புகள் துண்டிக்கப்பட்டும் பெரும் இனவழிப்புக்கு ஆளாயினர்
இந்த கொடூர சம்பவங்கள் கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களாக மாறின என்பது இருண்ட காலனித்துவரலாறு.
காங்கோ சுதந்திர நாட்டில் ஆப்பிரிக்கர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து, மிஷனரிகளுக்கு மன்னர் லியோபோல்ட் எழுதிய கடிதம் பின் வருமாறு...
மதிப்பிற்குரிய தந்தையர்களே மற்றும் அன்பான நாட்டு மக்களே,
உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி மிகவும் நுட்பமானது மற்றும் மிகுந்த சாமர்த்தியம் தேவைப்படுகிறது.
- நீங்கள் நிச்சயமாக நற்செய்தி அறிவிக்கச் செல்வீர்கள், ஆனால் உங்கள் நற்செய்தி அறிவிப்பு பெல்ஜியத்தின் நலனால் உத்வேகம் பெற வேண்டும்.
- நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் பணியை எளிதாக்குவதே உங்கள் முதன்மைப் பங்கு...
- தங்கள் நாயகர்களை மறந்து, நமது நாயகர்களைப் போற்றுமாறு நாட்டு மக்களுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும்.
- தங்கள் செல்வத்தின் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆர்வத்தை நீங்கள் துண்டிக்க வேண்டும்...
- தங்கள் நிலம் ஏழ்மையானது என்றும், அவர்கள் நம்மைச் சார்ந்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் அவர்களை நம்ப வைக்க வேண்டும்.
- கேள்வி கேட்காமல் கீழ்படியவும் பணிந்து போகவும் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
- அவர்களைக் கட்டுப்படுத்த பைபிளைப் பயன்படுத்துங்கள்.
- செல்வந்தராக இருப்பது சபிக்கப்பட்டதற்குச் சமம் என்றும், துன்பம் புனிதமானது என்றும் அவர்களுக்குக் கற்பியுங்கள்.
- தங்கள் நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.
- செல்வந்தராக இருப்பது சபிக்கப்பட்டதற்குச் சமம் என்றும், துன்பம் புனிதமானது என்றும் அவர்களுக்குக் கற்பியுங்கள்.
- தங்கள் நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.
ஆப்பிரிக்காவின் பழங்குடி இனத்தவர் (உதாரணமாக, உகாண்டா, சூடான், ருவாண்டா போன்ற பகுதிகளில்) அல்லது காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த ஒரு பிரபலமான வரலாற்று உண்மையை அல்லது போராட்டத்தை விவரிக்கும் வரி ஒன்றுண்டு
அழுகை தான் வருகிறது. மதம் மனிதனை மதம் பிடித்த யானையாக்குகிறது என்பது எக் காலத்திலும் நடந்து வருகிறது . கோவை செல்வராஜ்
ReplyDelete