ஊரெங்கும் ஒரே மழை
உடைந்தன குளங்கள்
மறைந்தன சாலைகள்
ஊரெல்லாம் வெள்ளக்காடு
மக்கள் மடிந்தனர்....
ஆண்டவர்கள்
ஆள்பவர்களை குறை கூறினர் ....
ஆள்பவர்கள் முன்பு
ஆண்டவர்களை குறை கூறினர் ...
அவதியுற்ற மக்கள்
ஆண்டவரிடம் அரற்றினர்.....
இயற்கை சிரித்தது....
“மண் கொடுத்தேன்
மழை கொடுத்தேன்
மரம் செடி கொடி கொடுத்தேன்
ஆறு குளம் கொடுத்தேன்
வாழ வழிவகை
அத்தனையும் கொடுத்தேன்.
அத்தனையும்
அழித்து விட்டு
அழுகின்றாயே..ஆண்டவரிடம் . "
No comments:
Post a Comment