பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் இயற்றிய செந்தமிழ்ப் பாவை பாடல்கள்
*******************
மார்கழி மாதம் வந்து விட்டாலே போதும், நம் மக்களுக்கு பக்தி பரவசம் பெருகி பிரவாகமாய் ஆலயங்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் படையெடுத்து விடுவார்கள். சமண பௌத்த மதங்கள் மேலோங்கி இருந்த காலத்தில், சனாதன மக்களுடைய எழுச்சி என்ற பெயரில் பக்தி இலக்கியங்கள் பிரவாகம் எடுத்தன. வைணவ சமயத்தை பரப்பும் நோக்கில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள் என்ற பெண்மணியார் திருப்பாவை என்ற பெயரில் பாடல்கள் பாடி பக்தி மார்க்கத்தை பெருக்கெடுக்க செய்தார். பக்தி, காதல் நிரம்பிய நவரச பாவங்களோடு 30 பாடல்கள் பாடி பெருமாளை வணங்கினார். மாணிக்கவாசகர் சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் தாமே தம்மை பெண்ணாக பாவித்து திருவெம்பாவை என்ற பெயரில் திருப்பள்ளி எழுச்சி பாடல்களை பாடினார்..
அதனுடைய தொடர்ச்சியாக மார்கழி மாதம் பிறந்தால் எல்லோரும் கோயில்களுக்கு படையெடுத்து விட்டார்கள். வைணவ சமயத்தார் திருவெம்பாவையும், சைவ சமயத்தார் திருப்பாவையும், இதர இந்து சமயத்தார் எல்லா சாமியையும் பாடக்கூடிய பாடல்களை, குறிப்பாக சினிமா பாடல்களை போட்டு முழங்கி மக்களிடையே பக்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.தாய்த்தமிழுக்கு, தமிழினத்திற்கு சூழ்ந்திருக்கக்கூடிய கேடு நீங்கிட தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வின்பால் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழ் பாவை என்ற இந்த எழுச்சி பாடலை இயற்றியுள்ளார்.
தாய்க்குலத்திற்கு கூறுவதாக, செந்தமிழ்ப் பாவையை இயற்றியுள்ளார். இப்பாடலை கேட்கும்போது நெஞ்சம் தூய்மை பெறும். தோள்கள் வலிவு பெறும்,பேய்மை கணமகலும், பிறவிநலம் பெறும், மனதை மயக்கும் தீவினைகள் அகலும், ஆதலின் சேய்களுக்கு தமிழமுத பாலூட்ட எழும்பிடுவாய் தமிழ்மறப்பெண்ணே என்று பள்ளியெழுச்சிப்பாடல் பாடி எழுப்புகிறார்...
***********
தாய்மைக் குலத்தீர்! தமிழ்மொழிக்கே யாம்பாடு
வாய்மைத் தமிழ்ப்பாவை வந்திங்குக் கேண்மினோ!
தூய்மையுறும் நெஞ்சம்! சுடர்மணிப்பூண் தோள்கலிக்கும்
பேய்மை யகலும்! பிறவிநலம் வந்தெய்தும்!
மாயப் புரைசால் மலிவினைகள் மாண்டொழியும்
சேயவிழ்வாய் நாறச் சிமிழ்மார்பு அமிழ்தூட்டி
ஏய அவர்செவியில் எந்தமிழ்ப்பால் ஊட்டுதற்கே
ஆய பொழுதும் அலர்ந்தேலோ ரெம்பாவாய்! 1
No comments:
Post a Comment